பாலஸ்தீனிய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி

அன்புள்ள தோழர்களே,

ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில் நடக்கவுள்ள மாநாடு எல்லா விதங்களிலும் வெற்றியடைய வெண்டும் என்ற எங்கள் நல் வாழ்த்துகளை இந்திய மக்களுக்கும், உன்கள் கட்சிக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புள்ள தோழர்களே, தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி குறித்தும், இந்தியாவில் இடதுசரி சக்திகள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் உங்கள் மாநாட்டில் விவாதிப்பீர்கள் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். பாலஸ்தீனிய பிரச்சனைக்கு சிறப்பு கவனம் அளித்து பாலஸ்தீனிய விடுதலைக்கும், 1967 எல்லை அடிப்படையில் கிழக்கு ஜெரசலத்தை தலைநகரமாகக் கொண்ட சுதந்திர அரசுக்குமான போராட்டம் மற்றும் ஐ.நா தீர்மானம் 194 அடிப்படையில் அகதிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு தங்கள் ஒருமைப்பாட்டு ஆதரவை மீண்டும் வலியுறுத்துவீர்கள் என்று நம்புகிறோம்.

அன்பான தோழர்களே, நம் இரு கட்சிகளுக்கு இடையிலும், இரு நாட்டு மக்களுக்கு இடையிலும் கூட்டுறவு வலுப்பட வேண்டு என எதிர்நோக்குகிறோம்.

மத்தியக் குழு,
பாலஸ்தீனிய மக்கள் கட்சி

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...