பிஎம் கேர் நிதியம்: வெளிப்படையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பிஎம் கேர்ஸ் நிதியம் என்ற தனியார் அறக்கட்டளை வசூல் செய்து குவித்துள்ள நிதி குறித்து பொது மக்களின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் அலுவலகம், பிஎம் கேர்ஸ் நிதியம் சார்பில் வசூலித்துள்ள தொகை குறித்த விவரங்களை வெளிப்படுத்திட பிடிவாத மாக மறுத்து வருவது கண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அதிருப்தி கொள்கிறது. பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை அறங்காவலர்களாவும் கொண்ட ஒரு தனியார் அறக்கட்டளையாகும்.

இதனால் இது தொடர்பாக எவரும் தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்க முடியாது என்றும், அரசாங்கத்தின் தணிக்கையாளர் எவரும் தணிக்கை செய்ய முடியாது என்றும் கூறப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிதியம் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை என்பதும், எவருக்கும் கணக்கு காட்ட தயாராக இல்லை என்பதும் தெளிவாகிறது.

இந்த நிதியம் குறித்து மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றை முறியடித்திடுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பதாகவே வெளிப்படையாகக் கூறப்பட்டு, இந்த நிதியத்திற்கு தாராளமாக நன்கொடைகள் அளிக்க வேண்டும் என்று பொது வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் தொழில்முறை சார்ந்தோர்களிடமிருந்து கட்டாயமாக ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக இந்த நிதியத்திற்காக வசூல் செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டு ஆண்டு கால நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியும் (MPLAD) இந்த பிஎம் கேர்ஸ் நிதியத்திற்குத் திருப்பி விடப்பட்டிருக்கிறது.

2013 கம்பெனிகள் சட்டம், கார்ப்பரேட் சமூக பொறுப்பு பங்களிப்புகளை இந்தத் தனி யார் அறக்கட்டளைக்கு நன்கொடைகள் அனுமதிக்கும் விதத்தில் திருத்தப்பட்டிருக்கிறது.  இந்த நிதியம் தேசிய சின்னத்தையும், பிரதமரின் படத்தையும் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சுற்றறிக்கைகள் அதன் ஊழியர்களை இந்நிதியத்திற்கு நன்கொடை அளிக்குமாறு கோருவதையும் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நன்கொடைகள் அனைத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.      

அரசாங்கத்தின் சார்பில் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே, அதிகாரபூர்வமாக பிரதமர் தேசிய நிவாரண நிதியம் என்ற ஒன்று வெளிப்படைத்தன்மையுடனும், மக்களுக்குக் கணக்கு கூறும் விதத்திலும், மத்திய தணிக்கைத்துறைத் தலைவரால் (சிஏஜி) தணிக்கைக்கு உட்படுத்தப்படக்கூடிய நிலையிலும் இருக்கும் அதே சமயத்தில், இவ்வாறு தனியார் அறக்கட்டளை நிதியம் உருவாக்கியது ஏன் என்பதற்கு பிரதமர் அலுவலகத்தி லிருந்து எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்த நிதியத்திற்கு ஏற்கனவே பத்தாயிரம் கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இவற்றில் நாலாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசாங்கத்தின் நிறுவனங்கள் வழியாகவும், அரசு ஊழியர்கள் வழியாகவும் வந்திருக்கின்றன. அரசாங்கத்தின் வேண்டுகோளை அடுத்தே இந்த அளவிற்கு நிதி சேர்ந்திருக்கிறது.  

நம் நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்திட இந்த நிதியத்திலிருந்து நிதி விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அதன்மூலம் பரிசோதனை செய்யப்படுவ திலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் தற்போதுள்ள பற்றாக்குறை நிலையைப் போக்கக்கூடிய விதத்தில் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிட வேண்டும் என்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் வெளிப்படையாக டெண்டர் எதுவும் விடாமல் வெண்டிலேடர்கள் இந்த நிதியத்தின் மூலமாகக் கொள்முதல் செய்ததில் புகார்களும், முரண்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.

இந்த நிதியம் வெளிப்படைத் தன்மையுடனும், மக்களுக்குக் கணக்குக் காட்டக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கருதுகிறது.

இந்த நிதியம் உடனடியாக மாநில அரசாங்கங்களுக்கு மாற்றப்பட வேண்டும். ஏனெனில் அவைதான் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதில் முன்னணியில் இருக்கின்றன. இந்த நிதியத்தின் விவரங்கள் பொதுமக்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் விதத்தில் வெளிப்படையாக அறிவித்திட வேண்டும்.

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...