பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ வசதிகளில் உள்ள பற்றாக்குறைகளை சமாளிக்கவும் உடனடியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

கோவிட் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என மக்கள் மீது பழிபோட்டும், மாநில அரசாங்கங்கள் மீது பழியைத் திசை திருப்பியும் தன்னுடைய பொறுப்பில் இருந்து மத்திய அரசாங்கம் தப்பிக்க முடியாது.

மத்திய அரசாங்கம் அனைத்து விதமான பெருந்திரள் கூட்டங்களுக்கும் உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும்; தேர்தல் கூட்டங்களில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை கடுமையாக முறைப்படுத்த வேண்டும்; இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் கட்டணமின்றி வீடு போய்ச் சேர சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்; PM CARES நிதியம் மூலமும், கொரோனாவுக்காகத் திரட்டிய பிற நிதியையும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்; அவசரகால அடிப்படையில் நாடு முழுவதும் தடுப்பூசி நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டும்.

இச்சூழல், மக்களின் வாழ்வாதார நிலையைக் கடுமையாகப் பாதித்து, மென்மேலும் அதிகமான துயரங்களை மக்கள் மேல் சுமத்துகிறது. அரசாங்கம், நிவாரணம் தேவைப்படும் அனைவருக்கும் மாதம் 7500 ரூபாயையும், இலவச உணவு தானியங்களையும் நிவாரணமாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை பெருமளவில் விரிவுபடுத்த வேண்டும். கூடிய விரைவில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் ஒன்றை உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.

இந்நடவடிக்கைகள் எல்லாம், உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச நடவடிக்கைகளே.

போர்க்கால அடிப்படையில், குறைந்தபட்சமாக இந்த நடவடிக்கைகளையாவது பிரதமரும், மத்திய அரசாங்கமும் நிறைவேற்ற வேண்டும்.

அரசியல் தலைமைக்குழு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...