பிரதமர் இன்றே அறிவிக்க வேண்டும்!

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு பரவிவருகிற சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமாக முன்னுக்கு வந்திருக்கின்றன. எனவே, இந்தியாவில் என்.பி.ஆர் கணக்கெடுப்பை வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து நடத்துவதை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.

அரசும் அதன் முகமைகளும் ஒரே உணர்வோடு நின்று கொள்ளை வியாதி பரவலை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் சுகாதாரத்திற்கும் வாழ்க்கை பாதுகாப்புக்கும் எழுந்திருக்கும் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும். என்.பி.ஆர் என்.ஆர்.சி திட்டங்களை 13 மாநில அரசுகள் எதிர்த்திருக்கின்றன என்பதை இங்கே கவனப்படுத்துகிறோம். சென்சஸ் கணக்கெடுப்பை பொருத்தமட்டில் நிலமை சீரானதற்கு பிறகே பணிகள் தொடங்க வேண்டும்.

அதிக விளம்பரத்திற்கு பிறகு பிரதமர் ஆற்றவிருக்கும் உரையில் இந்த அறிவிப்புகள் இடம் பெற வேண்டுமென்று வலியுறுத்தி கேட்கிறோம்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...