புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் அருகே தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொடூரக்கொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இச் சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் இது கூட்டு பாலியல் படுகொலையாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்தும் விசாரணை செய்து காவல்துறை விரைந்து அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மிருகத்தனமான இத்தகைய மோசமான சம்பவங்கள் மனித நாகரீகத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. அரசும், சமூக இயக்கங்களும் இத்தகைய அநாகரீகமான நடவடிக்கைகளை எதிர்த்து உரிய விழிப்புணர்வினையும், மனித பண்புகளையும் பாதுகாப்பதற்கான இயக்கங்களையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...