பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கைவிடுக: சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே லிட்டருக்கு ரூ.3.13-ம், ரூ.2.76-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இம்மாதம்(மே) 1-ம் தேதி முதல் கடந்த 15 நாட்களுக்குள் மட்டும் பெட்ரோல் விலை ரூ.7.09-ம், டீசல் விலை ரூ.5.08-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இவை மிகக் கடுமையான உயர்வுகளாகும்,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அக்குறைப்பின் பலன் மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. உதாரணமாக, 2014 மே மாதத்தில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 105 டாலராக இருந்தது, 2015 மே மாதத்தில் பீப்பாய் விலை பாதியாக, சுமார் 59 டாலராகக் குறைந்தது. இதே காலகட்டத்தில், பெட்ரோல் விலை லிட்டர் ரூ.74.60-ல் இருந்து ரூ.69.45-ஆகவும், டீசல் விலை ரூ.60.50-லிருந்து ரூ.55.74-ஆகவும்தான் குறைந்திருக்கிறது. ஏனென்றால், சர்வதேச விலை குறைந்தாலும், மத்திய அரசின் வரி விகிதம் உயர்த்தப்படுகிறது.

மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு நான்கு முறை வரி விகிதங்கள் உயர்த்தியதன் விளைவாக, பெட்ரோல் மீதான வரி ரூ.10.39-லிருந்து ரூ.18.01 ஆகவும், டீசல் மீதான வரி ரூ.4.50-லிருந்து ரூ.10.82 ஆகவும் உயர்ந்திருக்கிறது. எவ்வகையிலும் மக்கள் பலனடைந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுவதையே இது காட்டுகிறது. இந்த மக்கள் விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த விலை உயர்வு அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் உயர்த்திவிடும், ஏற்கனவே கடுமையான விலைவாசியில் சிக்கித்தவிக்கும் மக்கள் மீது இது பேரிடியாக விழும். எனவே, இந்த விலை உயர்வைக் கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. இந்த விலை உயர்வுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...