பெண்ணை உயர்த்தியது சோவியத் புரட்சியே! – உ.வாசுகி

சாதியமும், ஆணா திக்கமும் சமூகத்தில் வேரூன்றி பரவிக் கிடக்கிறது. இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் சாதி உள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கீழ்மட்டத்தில் உள்ள வேலைகளே தரப்படுகின்றன. முதலாளித்துவத்தால் ஆணாதிக்கம் மற்றும் சாதியத்தை ஒழிக்க முடியவில்லை. சிலர் மனமாற்றத்தால்தான் ஒழியும் என்கின்றனர். அது முற்றிலும் தவறு. சாதிய கட்டமைப்பும், அதன் பண்பாட்டுக் கூறுகளும் வீழ்த்தப்பட வேண்டும் என இ.எம்.எஸ் கூறினார். நமது அரசியல் சட்டம் அனைவரும் சமம் எனக் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் பொதுக் கிணற்றில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்கத் தடை, தலை முடியை வெட்டிக் கொள்ள முடியாது. தலித் பெண் சத்துணவு பணியாளராக வேலைக்கு வந்தால், அங்குள்ள ஆதிக்க சமூகம் குழந்தைகளை அங்கு உணவு உண்ணவிடாமல் தடுக்கிறது.

தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை, மூன்று குவளை முறை உள்ளது. தலித் பஞ்சாயத்து தலைவர் எந்த பணியும் செய்ய முடியாது. துணைத் தலைவரோ, அல்லது ஊராட்சி எழுத்தரோதான் அந்த வேலையை செய்கின்றனர். பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவரானால், சுயமாக பணியாற்ற முடியாது. கணவரோ அல்லது உறவினரோதான் அந்த வேலையை செய்யும் நிலை உள்ளது. ஆனால், 100 ஆண்டுகளுக்கு முன்னாள் ரஷ்யாவில் நடந்த புரட்சியால் தனி உடைமை தகர்க்கப்பட்டது.

பெண்களுக்கு சம உரிமை தரப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமையை முதன் முதலில் தந்தது சோவியத் அரசுதான். விண்வெளி ஆராய்ச்சிக்கு முதன் முதலில் பெண்ணை அனுப்பி வைத்தது. கப்பலை இயக்கும் மாலுமியாக பெண்ணை நியமித்தது. தொழிலாளர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...