பெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் காவி சாயம்  ஊற்றி சென்றுள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.  

கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கோழைகள்தான் இக்காரியத்தை செய்வார்கள். மதவெறி சக்திகளும். சங்பரிவார் போன்ற அமைப்புகளும் இத்தகைய பிற்போக்குத்தமான காரியத்தை தொடர்ந்து செய்து வருகின்றன.

பெரியார் சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என்று பாஜக வின் எச்.ராஜா  பேசியது, பெரியார் சிந்தனைகள் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதன் நீட்சியும் தொடர்ச்சியுமே இந்த இழிசெயல்..

கருத்துக்களை கருத்துக்களால் மோத வேண்டுமே, தவிர இத்தகைய இழி செயல்கள் மூலம் பெரியாரின் கருத்துக்களை மறைத்துவிட முடியாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது.

இதற்கு காரணமானவர்களை காவல்துறை கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...