பேருந்து, பால் கட்டண உயர்வுகளை திரும்பபெற வலியுறுத்தி டிசம்பர் 5 / மார்க்சிஸ்ட் கட்சி மறியல்

தமிழக அரசு பால்விலையை லிட்டருக்கு ரூ. 6.25 காசும், பேருந்து கட்டணத்தை ஏறத்தாழ இரண்டு மடங்காகவும் உயர்த்தியுள்ளது. மின்கட்டணத்தை கடுமையாக உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வைக் கண்டித்தும், திரும்பப் பெறவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அறிக்கை விடுத்துள்ளது.

மத்திய காங்கிரஸ்-திமுக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் உணவுப்பொருட்கள் உள்ளிட்டு அனைத்து அத்தியவாசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசின் கட்டண உயர்வுகள் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

பேருந்து கட்டண உயர்வால் அன்றாடம் பல இடங்களுக்கு வேலைக்கு சென்று திரும்புகிற கிராமப்புற- நகர்ப்புற ஏழை மக்கள், நடுத்தர மக்கள் தங்கள் ஊதியத்தில் கூடுதலாக ஒருபகுதியை பேருந்து கட்டணமாக தற்போது செலுத்த நேரிட்டுள்ளது.

ஆவின் பால் விலை உயர்வால் விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தினர் பாலை வாங்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்தம் குழந்தைகள்/சிறுவர்கள்/ முதியோர்களுக்கு குறைந்தபட்ச ஊட்டச்சத்து தரும் உணவான பாலை இழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தேச மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பினரையும் பாதிப்பதோடு, வாடகை வீட்டில் குடியிருப்பவர்களை மிகக்கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கும்.

எனவே, இந்த விலைஉயர்வுக்கு முந்தைய திமுக அரசு பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்ததும், மத்திய காங்கிரஸ் அரசு நிதி ஒதுக்க முன்வராததுமே காரணம் என்று சொல்லி தற்போதைய கட்டண உயர்வை நியாயப்படுத்தாமல் உயர்த்தப்பட்ட பால்விலை, பேருந்து மற்றும் உத்தேச மின்கட்டண உயர்வுகளை திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக அரசை வலியுறுத்துகிறது. பேருந்து கட்டணம், மின்கட்டணம், பால் விலை உயர்வுகளை திரும்பப் பெற வலியுறுத்தி, பெருமழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட மறியல் போராட்டம் டிசம்பர் 5 அன்று தமிழகம் முழுவதும் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெறும். பெருந்திரளான இவ்வியக்கத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கட்சி ஜனநாயக சக்திகளையும், அனைத்து தரப்பு மக்களையும் கேட்டுக் கொள்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தென்சென்னையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். இதுபோல் கட்சியின் மாநிலத்தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

பேருந்து – பால் – மின் கட்டண உயர்வுகளை திரும்பபெற வலியுறுத்தி டிசம்பர் 5, 2011 தமிழகம் முழுவதும் மறியல் மாவட்ட வாரியாக பங்கேற்கும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் 

1. தென்சென்னை ஜி. ராமகிருஷ்ணன், உ. வாசுகி, க. பீம்ராவ் MLA., அ. பாக்கியம், ஏ.ஏ. நயினார்

2. வடசென்னை  அ. சவுந்தரராசன் MLA., எஸ்.கே. மகேந்திரன், மாலதி சிட்டிபாபு

3. திருவள்ளுர்        தே. இலட்சுமணன், கே. செல்வராஜ்

4. காஞ்சிபுரம்    பி. சுகந்தி, ஜி. மோகனன், எஸ். கண்ணன்

5. வேலூர்                  என்.சீனிவாசன், ஏ. நாராயணன்

6. திருவண்ணாமலை எம்.வீரபத்திரன்

7. விழுப்புரம்        ஜி. ஆனந்தன், ஆர். ராமமூர்த்தி MLA.,

8. கடலூர்           கே. பாலகிருஷ்ணன் MLA. டி. ஆறுமுகம், எஸ். தனசேகரன், மூசா

9. திருவாரூர்       ஐ.வி. நாகராஜன்

10. நாகப்பட்டினம்   ஏ.வி.முருகையன்,வி.மாரிமுத்து, நாகை மாலி MLA.,

11. தஞ்சாவூர்       ஆர்.சி. பழனிவேல், கோ. நீலமேகம்

12. புதுக்கோட்டை   சு.பொ. அகத்தியலிங்கம், எம். சின்னதுரை

13. திருச்சி         எஸ். நூர்முகமது, எஸ். ஸ்ரீதர், கே. முகமதுஅலி

14. கரூர்           ஜி. ரத்தினவேல், கே. கந்தசாமி

15. பெரம்பலூர்     ஜி. மணி, ஆர். மணிவேல்

16. நாமக்கல்       எஸ். திருநாவுக்கரசு, ஏ. ரெங்கசாமி

17. சேலம்         ஆர். சிங்காரவேலு, ஆர். வெங்கடபதி, கே. ஜோதிலெட்சுமி

18. கிருஷ்ணகிரி    ப. சுந்தரராஜன், டி. ரவீந்திரன்

19. தருமபுரி       என்.குணசேகரன்,எம்.மாரிமுத்து,பி. டில்லிபாபு MLA.,

20. ஈரோடு        பி. மாரிமுத்து, கே. துரைராஜ்

21. திருப்பூர்       கே. தங்கவேல் MLA., கே. காமராஜ்

22. கோவை       யு.கே. வெள்ளியங்கிரி, என். அமிர்தம்

23. நீலகிரி        கே.சி. கருணாகரன், ஆர். பத்ரி

24. தேனி         ஏ. லாசர் MLA, கே. ராஜப்பன்

25. திண்டுக்கல்    என். வரதராஜன், என். பாண்டி, கே. பாலபாரதி MLA. ஆர். மனோகரன்

26. மதுரை புறநகர்  சி. ராமகிருஷ்ணன், என். நன்மாறன், மதுக்கூர் ராமலிங்கம்

27. மதுரை மாநகர்  பா. விக்ரமன், ஆர். அண்ணாதுரை MLA.,

28. விருதுநகர்      MNS.வெங்கட்ராமன், எஸ். பாலசுப்பிரமணியன்

29. சிவகங்கை      எம். அர்ச்சுனன்

30. இராமநாதபுரம்   எஸ்.ஏ. பெருமாள், ஆர். ஞானவாசகம்

31. தூத்துக்குடி      கே. கனகராஜ், ஆர். மல்லிகா

32. திருநெல்வேலி   பி.சம்பத், வி. பழனி, ஆர். கருமலையான்

33. கன்னியா குமரி  என். முருகேசன்,

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...

Leave a Reply