போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை சிபிஐ(எம்) தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவு

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அரசாணை எண் 191.ன்படி மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிநிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

This slideshow requires JavaScript.

செவிலியர்கள் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசும், காவல்துறையினரும் அடக்குமுறைகளை ஏவி அடாவடித்தனம் செய்து வருவதை  அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப. செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் பி. சுகந்தி, தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. செல்வா ஆகியோர் இன்று (29.11.2017) டி.எம்.எஸ். வளாகத்திற்கு நேரில் சென்று போராடும் செவிலியர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆதரவு தெரிவித்ததுடன், காவல்துறையினரின் அடக்குமுறைகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

Check Also

இந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

நாள்: 01.12.2020 இந்திய பருத்திக்கழகத்துக்குசுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமர் ...