போலி வாக்காளர்களை நீக்கவும், புதிய வாக்காளர் சேர்ப்பிற்கு சிறப்பு முகாம் நடத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2016 ஜனவரி 1ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களின் பெயர்களை சேர்க்கவோ, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளவோ, நீக்கம் செய்யவோ கால அவகாசம் உள்ளதை முன்னிட்டு சிறப்பு முகாம் ஜனவரி 30 அன்று நடைபெற்றது. இதுபோல் பிப்ரவரி 6 அன்றும் வாக்குச் சாவடிகள் தோறும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. போலியான வாக்காளர் சேர்ப்பிற்கு இடம் தராத வகையில் இதுபோன்ற சிறப்பு முகாம்களை தமிழக தேர்தல் ஆணையம் நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் போலியான வாக்காளர் சேர்ப்பு உள்ளது என செய்திகள் வெளிவருகின்றன. பட்டியலில் போலியான வாக்காளர்கள் உள்ளனரா என்பது குறித்து தேர்தல் ஆணையம் கள ஆய்வு செய்து போலி வாக்காளர்களை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது.

விடுபட்டு போன வாக்காளர்களை சேர்ப்பதற்கு கால அவகாசம் இன்னும் உள்ள நிலையில் வாக்குச்சாவடி வாரியான 2016, ஜனவரி 30, பிப்ரவரி 6 சிறப்பு முகாம்களை நடத்தியது போல், அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் வரை புதிய வாக்காளர் சேர்ப்பிற்கான வாராந்திர சிறப்பு முகாம்களை தொடர்ந்து நடத்திடவும், புதிதாக சேர்க்கப்பட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தேர்தலுக்கு முன்னரே வழங்கிடவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...