மக்கள் நலப்பணியாளர்களை பணியில் அமர்த்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

24-1-2012 உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று மக்கள் நலப்பணியாளர்களை பணியில் அமர்த்துக! சிபிஎம் வலியுறுத்தல்!   கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு பதிமூன்றாயிரம் மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

மேலும் அரசின் பணி நீக்க ஆணையை திரும்பப் பெறவும் வலியுறுத்தியது. இப்பின்னணியில் பணியிலிருந்து தங்களை நீக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி வெளியிட்ட அரசாணை செல்லாது என நேற்று(23-1-2012)  தீர்ப்பளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  வரவேற்கிறது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று உடனடியாக 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டுமெனவும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திட வேண்டாமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது. (ஜி. ராமகிருஷ்ணன்) மாநிலச் செயலாளர்

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply