மதத்தை குறிப்பிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது!

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரத்திற்கு சென்றுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கேசவனேரி என்ற பகுதியில் தன்னிடம் மனு கொடுக்க வந்த மக்களிடம் அவர்களின் மதத்தை குறிப்பிட்டு காஷ்மீரில் செய்திருப்பதைப் போல, தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களை ஒடுக்குவோம் என்றும் அவர் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசமைப்பு சட்டத்தின் பேரில் உறுதியெடுக்கும் மக்கள் பிரதிநிதிகள், அனைவருக்குமாக செயல்பட வேண்டும். முஸ்லிம்/இந்து என குடிமக்களை பிரித்துப் பேசுவது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, உள்நோக்கமுடையதும் ஆகும். மேற்சொன்ன செய்தி உண்மையென்றால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சரவையில் தொடர தகுதி இழந்துவிட்டார்.

தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அமைச்சர் மீது விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Check Also

யானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்!

பினராயி விஜயன் கேரளா முதல்வர் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு சோகமான நிகழ்வில் கருவுற்றிருந்த யானை உயிரிழந்தது குறித்து பலரும் கவலையும் ...