மதமோதலை உருவாக்கிய ஜீயர் சம்பத் குமார் மற்றும் இந்துத்துவா கும்பல் மீது நடவடிக்கை எடுத்திடுக! – சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மணப்பாறையிலிருந்து உடுமலைப்பேட்டை தாலுகா, தேவனூர்புதுhருக்கு விவசாயிகள் வாங்கிச் சென்ற மாடுகளை பழனி நகரத்தில் 28-6-2017 அன்று  தடுத்து நிறுத்தி ஓட்டுநரையும் தாக்கி  ஜீயர் சம்பத்குமார் என்பவர் காவல்நிலையத்தில் ஒப்படைத்து அவர்கள் மீது மிருகவதை தடைசட்ட்ததின் கீழ் வழக்கு போட வேண்டுமென்று வற்புறுத்தி இருக்கிறார்.  ஜீயருக்கு ஆதரவாக சென்ற இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அங்கு சிறுபான்மை மக்களுக்கு எதிராக கோஷமிட்டிருக்கிறார்கள்.

இந்த அராஜகத்தை கண்டித்து சிறுபான்மை மக்களும் அங்கு சென்று கோஷமிட்டியிருக்கிறார்கள். இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலை தடுத்து, அமைதியை உருவாக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிஐடியு தொழிற்சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் முயற்சித்து இருக்கிறார்கள். மோதலை தடுத்து அமைதி காத்திட முயற்சித்த மேற்கண்ட அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மீதே பழனி நகர் காவல்துறை துணை கண்காணிப்பளார் கொலை செய்ய எத்தனித்ததாக பொய் வழக்கு போட்டு பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

மோதலை தடுத்து அமைதியை நிலைநாட்டுவதற்கு பதிலாக மதவெறி கும்பலை ஊக்குவிக்கும் அளவுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மேற்கண்ட அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மதவெறி கும்பலுக்கு ஆதரவாக இருக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மேற்கண்ட அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

பழனி நகரத்தில் மதமோதலை உருவாக்கிய ஜீயர் சம்பத்குமார் மீதும், இந்துத்துவா அமைப்பைச் சார்ந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...