மதவெறியர்களை விரட்டுவோம் – கோவையை காப்போம் அனைத்து கட்சியினர் சூளுரை

கோவை, செப். 24 – வன்முறை வெறியாட்டத்தை கட்டுப்படுத்தாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்த சூழலில் மதவெறியர்களை புறக்கணித்து  கோவை மக்கள் ஜனநாயகத்தை பாதுகாத்தார்கள், கோவையை பாதுகாக்க ஓரணியில் நிற்போம் என்று அனைத்து கட்சியின் தலைவர்கள் சூளுரையேற்றனர்.

இந்து முன்னனி அமைப்பை சேர்ந்த சசிகுமார் என்பவர் வியாழந் அன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கோவையில் பல்வேறு இடங்களில் சங்பரிவார அமைப்புகள்  வன்முறை கும்பல்கள் சசிக்குமார் கொலைக் பயன்படுத்தி மத அரசியலை வைத்து ஆதாயம் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது. இதனால் அப்பாவி பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர் பதட்டமும், அச்சமும் உருவானது. இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் முயற்சியில் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து அமைதிக்குழுவை ஏற்படுத்த வேண்டும். கோவை நகரத்தின் அமைதிக்கு அனைத்து விதத்திலும் உங்களோடு நாங்கள் இருப்போம் என உறுதியளித்தனர். இதன் ஒருபகுதியாக கோவை செஞ்சுலுவை சங்கம் முன்பு அனைத்து கட்சியினர் மற்றும் முற்போக்கு அமைப்பினர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் மக்கள் ஒற்றுமை காத்திடுவோம் என்கிற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், சிபிஐ முன்னாள் எம்எல்ஏ எம்.ஆறுமுகம், சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையா, மனோகரன்,  காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மகேஷ்குமார், மயூரா ஜெயக்குமார், அனுஉலை எதிர்பபாளர் உதயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜோ.இலக்கியன், நிலாமணிமாறன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் வி.வாசன், தபெதிக கட்சியின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் தேமுதிகவினர், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏக்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி மற்றும்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை செயலாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் கட்சியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் வெண்மனி மற்றும் ஏராளமான அமைப்பின் தலைவர்கள், ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்ட உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசுகையில், சங்பரிவார அமைப்புகள் கோவையை குஜராத்தாக மாற்றுவோம் என்று முழக்கமிட்டு வெறியாட்டம் நடத்தினர். திட்டமிட்டு ஒருபிரிவினர் கடைகளை குறிவைத்து தாக்கிபோதும், தீக்கிரையாக்கப்பட்ட போதும் கோவை மக்கள் மதவெறி சக்திகளின் வெறுப்பேற்றும் நடவடிக்கைக்கு சிறிதும் இடமளிக்காமல் பகுத்தறிவு பகலவன் பெரியார் பிறந்த இந்த மண்ணை ஒருபோதும் மதவெறியர்களின் பிடியில் சிக்க விடமாட்டோம் என்று ஜனநாயகத்தை காத்தார்கள். ஆனால் வழிநெடுக நடைபெற்ற இந்த வன்முறை சம்பவங்களை வேடிக்கை மட்டும் பார்த்தது காவல்துறை. தமிழகத்தில் நடைபெற்று வரும் கூலிப்படையினரின் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியாத காவல்துறை, சசிக்குமார் படுகொலைக்கு பின்பு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என்பதை அறியாத உளவுப்பிரிவு காவல்துறை என அனைத்து தோல்வியடைந்துள்ள நிலையில் இதுகுறித்து இதுவரை தமிழகத்தின் அமைச்சர்கள் அறிக்கைகூட விடாதது கண்டிக்கத்தக்கது. மேலும், இவ்வளவு பெரிய சம்பவம் நடைபெற்றும் மற்றொரு பிரிவினர் அமைதி காத்தது என்பது ஜனநாயகத்தின்பால் அவர்கள் நிற்கிறார்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளனர். இந்த சமயத்தில் அனைத்து கட்சிகள் அமைப்புகள் ஒன்றினைந்து கோவையை காப்போம், மக்கள் ஒற்றுமையை காப்போம், மதநல்லினக்கம் காப்போம், மதவெறி சக்திகளை தனிமைப்படுத்துவோம் என உரையாற்றினார்கள். முன்னதாக அனைத்து கட்சியின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மதநல்லினக்க உறுதிமொழியேற்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்ட உறுதிமொழியேற்பு நிகழ்வில் நூற்றுக்கானோர் பங்கேற்றனர்.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...