மதவெறி சக்திகளின் வன்முறையால் பாதிக்கப்பட்ட புதுதில்லி மக்களுக்கு நிவாரண நிதி வழங்குக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்…

தலைநகர் புதுதில்லியில் மதவெறி சக்திகளின் வன்முறை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தலைநகர் புதுதில்லியில் மதவெறி சக்திகளின் வன்முறை நடவடிக்கைகளால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். தில்லியில் வட கிழக்குப் பகுதியில் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இக்கலவரத்தில் இதுவரை 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இன்னும் பலரது நிலைமை கவலைக்கிடமானதாக உள்ளது. மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்து நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர். துயரமும், மன விரக்தியும் பரவலாக மக்களிடம் காண முடிகிறது.

இந்நிலையில் நிவாரணப் பணிகள் – வகுப்புச்சாயல் இல்லாமலும் மதச்சார்பற்ற கண்ணோட்டத்துடனும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்படி செய்ய வேண்டியுள்ளது. இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு சார்பில் நிவாரணக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதியளித்திடுமாறு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலக்குழுக்களையும் மற்றும் கட்சி அமைப்புகளையும், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே, மதவெறி சக்திகளின் வன் முறை நடவடிக்கைகளால் உயிரிழந்த மற்றும் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள புதுதில்லி மக்களுக்கு உதவும் வகையில் கட்சி அணிகளும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் தாராளமாக நிவாரண நிதி உதவி அளித்து உதவ வேண்டும்.

நிதி அனுப்ப வேண்டிய விபரம்
SB A/C No: 418674546,
IFSC Code No: IDIB000T014,
Name: Communist Party of India (Marxist),
Tamilnadu State Committee,
Indian Bank, T.Nagar Branch, Chennai-17.

ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் தோழர்கள், நண்பர்கள் தங்களது பெயர், மற்றும் முகவரி, அனுப்பிய தொகை, இ.டிரான்ஸ்பர் ரெபரன்ஸ் நம்பர், வங்கி செலான் ஆகிய விப ரத்துடன் “புதுதில்லி மக்களுக்கு நிவாரணம்” என்று தலைப்பிட்டு கட்சியின் மின்னஞ்சலுக்கோ (cpimtn2009@gmail.com), பேக்ஸ் (044-24341294) மற்றும் கடிதம் மூலமாகவோ தெரி விக்க கேட்டுக் கொள்கிறோம். காசோலை மற்றும் வரைவோலை அனுப்புவோர்கள் Communist Party of India (Marxist), Tamilnadu State Committee என்ற பெயருக்கு அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம்.

மணியார்டர் மூலம் அனுப்புவோர்கள் தங்களது பெயர், முகவரியுடன் கட்சியின் மாநிலக்குழு முகவரிக்கு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ்நாடு மாநிலக்குழு, 27, வைத்தியராமன் தெரு, தி. நகர், சென்னை – 600 017. போன்: 044-24341205, 24326800 / 24326900 பேக்ஸ்: 044 – 24341294, Email: cpimtn2009@gmail.com) அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...