மதவெறி பொய்யர் கூட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

மதவெறி பொய்யர் கூட்டத்தைத் தோற்கடிப்போம்!

திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் சூளுரை

திருப்பூர், ஜூன் 8 –

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியைத் தாக்க முயன்ற மதவெறி பொய்யர் கூட்டத்தை தோற்கடிப்போம் என்று திருப்பூரில் நடைபெற்ற கோபாவேச ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் கூறினர்.

புதுடில்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்க முயன்ற மதவெறி ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் இழிசெயலைக் கண்டித்து திருப்பூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், திமுக மாநகர அவைத் தலைவர் திருமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.சேகர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் வகுப்புவெறிக் கூட்டத்தைக் கண்டித்து உரையாற்றினர்.

இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், திமுக மாநகரச் செயலாளர் மேங்கோ பழனிச்சாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோபாவேச முழக்கம் எழுப்பினர்.

—————

Check Also

உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை – சிபிஐ(எம்) கண்டனம்!

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்நஷ்டஈடு வழங்க வலியுறுத்தல்! இன்று (25-4-2020) காலை திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம்,  இராமபட்டணத்தில் ராமசாமி ...