மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடக்கிறதா? சிபிஐ(எம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி

2000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட வேண்டும். அந்த குழுவில் துணைத் தலைவராக அந்தத் தொகுதி எம்பியும், உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்களும் இருப்பார்கள் என்றும் விதியுள்ளது. ஆனால், அதன்படி மதுரையில் ஒரு முறைகூட ஆலோசனைக் குழு கூட்டம் நடத்தப்படவில்லை. ஏன்?

கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில், பெரியார் பேருந்து நிலைய பணிகளுக்கான திட்ட மதிப்பீடு 159.70 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அது திடீரென 167.40 கோடியாக உயர்ந்துள்ளது ஏன்?

12 வெவ்வேறு திட்டங்களில் மொத்தம் 28 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது ஏன்?

பெரியார் பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன காப்பகம், தமுக்கம் வணிக வளாகம் போன்ற பிரம்மாண்ட கட்டிடங்களுக்காக, தோண்டப்பட்ட மண் எல்லாம் எங்கே கொட்டி வைக்கப்பட்டுள்ளது?

ஒவ்வொரு இடத்திலும் சுமார் 10 முதல் 40 மீட்டர் ஆளத்திற்கு மண் எடுக்கப்பட்டிருப்பதால், குறைந்தது 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் மண் எடுக்கப்பட்டிருக்கும். அவை எங்கே?

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி கேட்ட கேள்விகள்

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...