மத்திய அரசு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை மாநிலங்களுக்கு அளித்திட வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தில்!

மத்திய அரசு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை மாநில அரசுகளுக்கு அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் சார்பில் வியாழன் அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 2020-21 நிதியாண்டிற்கு, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை, மத்திய அரசால் அளிக்க இயலவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டிருப்பது அட்டூழியமாகும். இவ்வாறு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை என்பது சுமார் 2.35 லட்சம் கோடி ரூபாய்களாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த இடைவெளியைச் சரிசெய்திட, மாநில அரசுகள், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறுயிருப்பது அருவருக்கத்தக்கதாகும். மத்திய அரசாங்கம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை மாநில அரசுகளுக்கு, சட்டப்படி அளிக்கக்கடமைப்பட்டதாகும். தேவைப்பட்டால், மத்திய அரசாங்கம் கடன் வாங்கி, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டுமேயொழிய, மாநில அரசுகளைக் கடன் வாங்கிக் கொள்ள, கட்டாயப்படுத்த முடியாது.

கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவுவதற்கு முன்பே, நாட்டின் பொருளாதார நிலை மந்த நிலையை நோக்கிச் செல்லத்தொடங்கிவிட்டது. இப்போது கொரோனா வைரஸ் தொற்று போன்று “தெய்வீகத் தலையீடு” (“divine intervention”) ஏற்பட்டுவிட்டதாக, பொருளாதார மந்த நிலைக்குக் குறைகூறுவதை ஏற்க முடியாது. இது ஒட்டுமொத்தமாக மூர்க்கத்தனமானதும், தவறானதுமாகும். மத்திய அரசாங்கம், சட்டப்படி மாநில அரசுகளுக்கு அளித்திட வேண்டிய கடப்பாடுகளை அளித்திட வேண்டும்.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...