மலையாள மனோரமா இதழ் பொய்ச்செய்திகளைப் பரப்புவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மலையாள மனோரமா நாளிதழ், சிபிஎம் மத்திய தலைமை குறித்து பொய்ச்செய்திகளை முதல் பக்கத்தில் பிரசுரித்திருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கேரளாவிலிருந்து தெளிப்பான் பிரச்சனை மீது வந்த விளக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியத் தலைமை நிராகரித்திருக்கிறது என்று மலையாள மனோரமா நாளிதழ், தன்னுடைய முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டிருப்பது பொய்யானதும், எவ்வித அடிப்படையுமில்லாததுமாகும். ஒரு புகழ்பெற்ற நாளிதழ், இவ்வாறு பொய்ச்செய்தியைப் பரப்பிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும்.

கோவித் 19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், ஒரு முன்மாதிரியாக கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருப்பதுடன், இங்கே சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கும் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்துள்ள தொழிலாளர்களை விருந்தினர்களாகப் பாவித்து அவர்களுக்குப் பாதுகாப்பும், உதவியும் அளித்துள்ள நிலையில், கேரள அரசாங்கமும், கேரள மக்களும் இத்தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பதை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு, இந்தப் பொய்க் கதை வந்திருப்பதாகத் தெரிகிறது.

இத்தகைய ஜோடிக்கப்பட்ட செய்தியை கேரள மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு நம்புகிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...