2016 ஆகஸ்ட் மாதம் – மாட்டின் பெயரால் வன்முறைகள் அதிகரித்ததை கண்டித்து பிரதமர் மோடி பேசினார். ஆனால் அது வெறும் வாய்ச்சவடால் என்பதும், பாஜக ஆளும் மாநிலங்களிலேயே வன்முறையாளர்களை ஒடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் கீழ்க்காணும் கொடூர உண்மைகள் நிரூபிக்கின்றன.
- செப் 2015 – முகமது அக்லக், விமானப்படை வீரனின் தந்தை அடித்துக் கொலை. (தாத்ரி)
- அக்டோபர் 2015, ஜாகித் ரசூல் பாட் என்ற 16 வயது இளைஞன், கால்நடை ஏற்றிவந்த ட்ரக் வாகனத்தின் மீது வீசப்பட்ட குண்டுக்கு இறையானார். (உதம்பூர்)
- அதேபோல உ.பி மாநிலம் சஹரான்பூரை சேர்ந்த 20 வயதேயான ஒரு இளைஞர் ஓட்டிவந்த ட்ரக் – இமாச்சல் பிரதேசத்தில் கும்பலால் தாக்கப்பட்டது. அங்கேயே அவர் கொலையானார்.
- ஜனவரி 2016, மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் முஸ்லிம் தம்பதி தாக்கபப்ட்டனர். மத்திய பிரதேசம், கிர்கியா ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
- மார்ச் 2016 கால்நடை வியாபாரிகள் என்ற சந்தேகத்தில், ஜார்கண்டைச் சேர்ந்த முகமது மஜ்லூம் கொல்லப்பட்டார். காட்டிக் கொடுத்துவிடுவான் என்ற அச்சத்தில் அவரது 12 வயது மகனையும் உடன் தூக்கிலிட்டார்கள் பசுவின் பேரால் வன்முறையில் இறங்கும் கும்பல்.
- 2016 ஏப்ரல் – காளைகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முஸ்தைன் அப்பாஸ் – பசுப் பாதுகாவலர் என்ற பெயரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ஜூன் 2016, கர்நாடகாவில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பஜ்ரங்தள் இயக்கத்தைச் சேர்ந்த 30-40 பேர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
- ஜூன் 2016 ஹரியானாவில் மாட்டு வியாபாரிகள் சாணி உண்ண வன்கொடுமை செய்யப்பட்டனர்.
- ஜூலை 2016 – குஜராத் மாநிலம் ஊனாவில் மாட்டின் பெயரால் தலித் இளைஞர்கள் நடுத்தெருவில் அடித்து கொடூரமாக வதைக்கப்பட்டனர். இதற்கு எதிராக பெரும் எழுச்சியை குஜராத் கண்டது. அதனை அடுத்தே பிரதமர் மோடி கண்டன உரையாற்றினார்.
- மோடி பேச்சு – ஆகஸ்ட் 2016. அதே மாதத்தில் ஆந்திராவில் மொகட்டி எலிசா மற்றும் அவர் சகோதரர் ஆகிய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாட்டுத் தோல் எடுக்கும் வேலைக்கு அமர்த்தப்பட்டதால் – கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 2017 அபு ஹனிபா, ரியாசுதீன் ஆகியோர் அஸ்ஸாமில் அடித்துக் கொலை. அவர்கள் மீதும் கால்நடை வியாபாரி என சந்தேகமே காரணமாகச் சொல்லப்பட்டது.
- ஏப்ரல் 2017 பெஹ்லு கான் என்பவர் ஆல்வாரில் அடித்துக் கொல்லப்பட்டார். அவர் பால் உற்பத்தியாளர். ஆனால், பசு வியாபாரி என்று வதந்தி பரப்பிக் கொலை செய்தனர்.
- மே 2017 : இப்தார் விருந்துக்கு மாட்டுக்கறி எடுத்துச் செல்வதாக சந்தேகப்பட்டு, முஸ்லிம் ஒருவர் மீது ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் நடத்தப்பட்ட தாக்குதல்
- ஜூன் 2017 தமிழக கால்நடை வளத்துறை அதிகாரிகள், கால்நடைகளை வாங்கிச் சென்றபோது கொலைவெறித் தாக்குதல் பார்மரில்.
- ஜூன் 2017 மாட்டுக்கறி வதந்தி பறப்பி ஒருவர் அடித்துக் கொலை, 3 பேர் மீது தாக்குதம் பல்லபாகர், ஹரியானா.
- ஜூன் 2017 தில்லியில் முஸ்லிம் குடும்பம் மீது கொலைவெறித் தாக்குதல், தாக்குதல் நடத்திய கும்பல், மாட்டுக்கறி சாப்பிட்டதாக காரணம் கூறியது. இதில் 15 வயது மாணவன் கொலை செய்யப்பட்டார், இருவர் படுகாயம்.
2016 ஒரு ஆண்டில், தில்லியில் மட்டும் பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரால் 40 ஆயிரம் கால்நடைகளைக் கைப்பற்றியுள்ளனர். கால்நடை வியாபாரிகள் சங்கத்தினர், கால்நடைகளை திரும்பக் கேட்டு மனுச் செய்துள்ளனர். கால்நடை வணிகர்களை அடித்துப் பிடுங்கிய கால்நடைகளின் மதிப்பு சுமார் 50 கோடிக்கும் அதிகம்.