மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் மீது கொலைவெறித் தாக்குதல் மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த களர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் மதி (வயது 30) நவம்பர் 25ம் நாள் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட சமூக விரோதக் கும்பல் வழி மறித்து அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. விஜி என்பவரது தலைமையிலான இக்கும்பல் நடத்திய தாக்குதலால் அவர் தலையிலும், முகத்திலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற சமூக விரோதச் செயல்கள் மற்றும் மர்மக் கொலைகள் குறித்து இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த சமூக விரோதக் கும்பல் இத்தகைய கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் மதியின் மீது நடத்தப்பட்ட இத்தகைய கொடூரத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் சமீப காலமாக சமூக விரோத சக்திகள் மற்றும் கூலிப் படையினரின் கொலைவெறித் தாக்குதல்களும், வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இச்சம்பவத்தையும் காண முடிகிறது. மதியின் மீதான தாக்குதலை நடத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் இத்தகைய சமூக விரோத மற்றும் கூலிப் படையினிரின் தாக்குதல்களையும், நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டுவர உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...

Leave a Reply