மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த தலைவர் தோழர் கே.வரதராஜன் மறைவுக்கு கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா ஆழ்ந்த இரங்கல்

தோழர் கே.வரதராஜன் திடீர் மறைவு, விவசாயிகள் இயக்கத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாபெரும் பேரிழப்பாகும். அவர் திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் சங்க, விவசாய தொழிலாளர் சங்கத்தை துவக்கி தமிழ்நாடு முழுவதிலும் அவர் அந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக அரும்பாடுபட்டார். அதனுடைய விளைவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினுடைய தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் நீண்ட காலம் செயல்பட்டார். அவருடைய விவசாய சங்கத்தின் அரும்பணியானது அகில இந்திய அளவில் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு கட்சி அவரை உயர்த்தியது. அந்த பொறுப்பிலும் அவர் அகில இந்திய ரீதியில் விவசாயிகள் இயக்கத்திற்கு சீரிய தொண்டாற்றினார்.

தோழர் வரதராஜன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய திருச்சி மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் பின்னர் தமிழ் மாநிலக்குழுவிலும், மாநில செயற்குழுவிலும் அதன் பின்னர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். அவருடைய பொறுப்புகளை ஆய்வு செய்த கட்சியின் தலைமை அவரை அரசியல் தலைமைக்குழுவுக்கு தேர்ந்தெடுத்தது.

அந்த பொறுப்பிலும் அவர் விவசாயிகள் இயக்கத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கும் முக்கியமான பங்காற்றினார். அவருடைய திடீர் மறைவால் நமக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துயரத்தை தாங்கிக் கொண்டு தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் விவசாய இயக்க ஊழியர்களும் அவருடைய மறைவு தங்களுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாக கருதிக் கொண்டு தமிழ்நாட்டில் அவர் விட்டுச் சென்ற பணியை சிறப்பாக முடிப்பதற்கும் ஒரு பலம் பொருந்திய விவசாயி மற்றும் விவசாய தொழிலாளர் இயக்கத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதற்கும் தோழர்கள் அரும்பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தோழர் கே.வரதராஜன் மறைவால் பெரிதும் துயருற்றிருக்கும் அவருடைய மகளுக்கும் மகனுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வரதராஜனின் புகழ்.

Check Also

சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பில் கொல்லப்பட்டதற்கு – சிபிஐ (எம்) அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பின்போது கொல்லப்பட்ட அதிர்ச்சி நிகழ்வுக்குக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...