மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியை கையாடல் செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்படுகிற அரசு நிதி அத்துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகளால் கையாடல் செய்யப்படுவதாக செய்திகள் வந்த வண்ணமுள்ளன. மதுரை, ஈரோடு, நாமக்கல், சென்னை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இத்தகைய கையாடல்கள் அம்பலமாகியுள்ளன.

ஆயினும் இவ்வாறு தவறிழைத்த அதிகாரிகள் எவர் மீதும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தவறு செய்த ஒரு சில அதிகாரிகளை ஊர்மாற்றம் மட்டும் செய்துள்ளனர். இது ஒழுங்கு நடவடிக்கை என ஏற்றுக் கொள்ள முடியாது. இத்துறையின் மாநில ஆணையருக்கு இப்பிரச்சனையை மாற்றுத் திறனாளி அமைப்புகள் கொண்டு சென்ற போது தன்னால் எதுவும் செய்ய இயலாது என பொறுப்பற்ற முறையில் கை விரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சமூகத்தில் மிகவும் நலிந்த பிரிவினரான மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு நிதியை கையாடல் செய்வது கடுமையான குற்றமாகும்.

எனவே தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்து இத்தகைய புகார்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்தி தவறிழைத்த அதிகாரிகள் மீது இலாகாப்பூர்வமான நடவடிக்கைகள் மட்டுமின்றி, கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படுகிற நிதி முறையான வகையில் அவர்களுக்குச் சென்றடைய பல்வேறு மாற்றுத் திறனாளி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே  கண்காணிப்பு முறையை பலப்படுத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் ...

Leave a Reply