மாற்று அரசியல், மாற்றுபாதை கொண்டது: ஜி. ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் கடந்த 47 ஆண்டுகளில் திமுக 5 முறையும், அதிமுக 3 முறையும் ஆட்சி செய்துள்ளன. ஆனால் கருணாநிதியும், ஜெயலலிதாவும் வாக்களித்த மக்களை மறந்து விட்டு தங்களை வளர்த்துக் கொண்டார்கள். தொடர்ந்து இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் கனிம வளங்களை கொள்ளையடித்துவிட்டன.

கடந்த 20 ஆண்டுகளில் நடந்த கனிம வள கொள்ளை குறித்து ஜெயலலிதாவோ, கருணாநிதியோ  வாய் திறக்கவில்லையே. அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, முறைகேடாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் இருந்து 1,800 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதான் அதிமுக,திமுக, பாமக கட்சிகளின் யோக்கிதை.  ஆனால் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள  கட்சிகள் மீது யாராவது குற்றம் சாட்டமுடியுமா?

தில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். அம்பேத்கர், பெரியார், மார்க்சிய சிந்தனைகளை அவர்கள் சிந்திக்கக் கூடாது என பாஜக அரசு அங்கு பயிலும் மாணவர்களை ஒடுக்கமுயற்சிக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா உள்ளிட்ட 9 பேர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பாஜகவின் செயல்களை திமுக, அதிமுக கண்டிக்கிறதா?  என்றால் இல்லை. ஆனால் மாநிலம் முழுவதும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்தை காப்பதற்காகவும்  கண்டன இயக்கங்களை மக்கள் நலக் கூட்டணி நடத்தி வருகிறது.

மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஊழல் ஒழிக்கப்பட்டு, ஊழல் பணம் பறிமுதல் செய்யப்படும், விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும். மாற்று அரசியல், மாற்று பாதை, மறுமலர்ச்சியை ஏற்படுத்த, மது இல்லா, சாதி பேதமில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

Check Also

மனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…

அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...