மின் ஊழியர் மத்திய அமைப்பின் நீண்ட கால நிர்வாகி தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!

எம்எம்எஸ் என்று தோழர்களால்  அன்போடு அழைக்கப்படும் தோழர் மீனாட்சிசுந்தரம்  விக்ரமசிங்கபுரம் பஞ்சாலை போராட்டத்தில்  தோழர் ஏ.நல்லசிவன் அவர்களோடு கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.

தோழர் மீனாட்சி சுந்தரம் நீண்ட நெடுங்காலமாக மின்சார ஊழியர் சங்கத்திலும், மின்சார ஊழியர் மத்திய அமைப்பு மற்றும்  இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், தொழிற்சங்க இயக்கத்திலும் மிக முக்கியமான பங்கினை ஆற்றியவர். பணி ஓய்வுக்குப் பிறகும் இடதுசாரி இயக்கத்தோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர்.

99 வயதை அடைந்து அடுத்த 6 மாத காலத்தில் 100 வயதை அடையவிருந்த நேரத்தில் அவர் நேற்று இரவு மரணம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

 தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி  செலுத்துவதுடன் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...