முல்லைப் பெரியாறு – உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு!

உச்சநீதிமன்றத்தின் 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்ற கேரள அரசின் 2006 சட்டத்தை செல்லாது என்றும், தமிழ்நாடு அரசாங்கம் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், தமிழ்நாடு அரசாங்கம் அணையின் பாதுகாப்பு மற்றும் மராமத்துக்கான பணிகளைச் செய்வதற்கு, கேரள அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென்றும், இதில் கேரள அரசாங்கம் தலையிடக் கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டப் பிரச்சனை தமிழ்நாட்டின் பத்து தென்மாவட்டங்களின் வாழ்வாதாரப் பிரச்சனை மட்டுமின்றி, தமிழக மக்களின் நியாயமான உணர்வாகவும், கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  வரவேற்பதோடு, இத்தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசாங்கம் உரிய நடடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறது.
 

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply