மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அரசியல் உள்நோக்கம் கொண்டது சிபிஐ(எம்) கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தாக்கல் செய்த முதல்கட்ட  வரைவு  அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது  மத்திய அரசு திட்டமிட்டு உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது,  மேலும், காவிரி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் கவனிப்பதற்கென உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆணையத்தின் எல்லையைத் தாண்டி   கர்நாடக அரசின் வேண்டுகோளை ஏற்று மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை வாரியத்தையும் மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.  எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ள ஒப்புதலை ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி
கேட்டுக்கொள்கிறது.

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...