மே 31-ல் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து முழு அடைப்பு! மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல்!!

பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு, இதுவரை இல்லாத வகையில் ரூ.7.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் வேளையில் இந்த பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட உள்ளதாக பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன் விளைவாக சங்கிலித் தொடர் போல உணவுப்பொருட்கள் உள்ளிட்டு அனைத்து அத்தியாவசியப்பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது..

இதனால் சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.  பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இடதுசாரிக்கட்சிகள்  மே.31 அன்று  நாடு முழுவதும் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழகத்தில் மே.31 அன்று முழு அடைப்பு உள்ளிட்டு  அனைத்து வடிவங்களிலும் கண்டன முழக்கம் எழுப்பிட தமிழக மக்களுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  வேண்டுகோள் விடுக்கிறது.

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply