மோடியின் ஈராண்டு: ஊழல் எதிர்ப்பு சாத்தியமானதா?

கருப்பில் மறையும் முதலைகள்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது நரேந்திரமோடி மக்களுக்கு அளித்த வாக்குறு திகளை நம்மில் ஒருசிலராவது நினைவுவைத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். அவர், நாட்டு மக்களிடம் நாங்கள் ஆட் சிக்கு வந்தால் …“லஞ்சம் வாங்க மாட்டோம், லஞ்சம் வாங்குவதற்கு யாரையும் அனுமதிக்கவும் மாட்டோம்,’’என்று வாக்குறுதி அளித்தார். இப்போதும்கூட அதையேதான் அவரும் அவரது தொண்டரடிப் பொடிகளும் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் உண்மை என்ன?லஞ்ச ஊழலைத் தடுப்பதற்கான கொள்கைகள் சட்டரீதியாக நிறைவேற்றப் பட் டாக வேண்டும். ஆனால் மோடியின் அரசாங்கத்தில் அதற்கு நேர் எதிர்மாறாகத் தான் செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. லோக்பால் சட்டமுன்வடிவு, அதனை எந்த அளவிற்கு நீர்த்துப்போகச் செய்திடமுடியுமோ அந்த அளவிற்கு நீர்த்துப்போக வைத்து, இறுதியாக நாடாளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2014 ஜனவரியில் அரசிதழில் வெளியிடப்பட்டது. லோக்பாலுக்கான தேர்வுக் குழுவினரில் எதிர்க் கட்சித் தலைவரும் சேர்க்கப்பட வேண்டும் என்று அதில் ஒரு பிரிவு கூறுகிறது. அதிகாரப்பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர்ஒருவர் சட்டரீதியாகத் தேர்ந்தெடுக் கப்படாததால், எதிர்க்கட்சிகளில் பெரிதாக உள்ள கட்சியின் தலைவர் தேர்ந் தெடுக்கப்பட வேண்டும் என்பது தெளி வான ஒன்றேயாகும். இதற்கு ஒரு சிறிய திருத்தம் தேவை, ஆயினும் கடந்த ஈராண்டுகளில், மோடி அரசாங்கம் இந்தத்திருத்தத்தைச் செய்திட சிறிதமுயற்சி செய்யவில்லை. அதன் காரணமாக இந்தச் சட்டத்தின் நடைமுறையையே குளிர்பதனப் பெட்டியில் வைத்துள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக, அதிகாரவர்க்கத்தினரையும் அவர்தம் குடும்பத் தாரையும் பாதுகாக்கக்கூடிய விதத்தில் இந்தச் சட்டத்தில் மேலும் பல திருத்தங்களைக் கொண்டுவந்து, இந்தச் சட்டத்தை மேலும் மோசமானமுறையில் நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கு குஜராத் மாடல் சரியான உதாரணமாகும். அங்கே லோக் ஆயுக்தாகடந்த பத்தாண்டுகளாக அமைக்கப் படவே இல்லை. உச்சநீதிமன்றம் தலையில் குட்டியபின்னர்தான் வேறு வழியின்றி அமைக்கப்பட்டது. லோக்பாலுக்காக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் அதற்கு ஆதரவு தெரிவித்தவர் தான் இன்றைய பிரதமர் மோடி. ஆனால் இவர் பிரதமராகி ஈராண்டுகள் ஆகிவிட்டன. எங்கே லோக்பால், மிஸ்டர் மோடி?
லஞ்ச ஊழல் தடைச் சட்டம்
லோக்பால் நியமனம் செய்வதற்கு மறுப்பதிலிருந்து. அரசாங்கம் லஞ்ச ஊழல் சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த அளவிற்கு ஆர்வமின்றி இருக்கிறது என்பது மிகவும் தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது. லஞ்ச ஊழல் தடைச் சட்டத்திற்கு சில திருத்தங்களை அது கொண்டு வந்திருக்கிறது. அதன்படி ஓர் அரசு ஊழியர் மீது லஞ்ச ஊழல் சட்டத் தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில் அது லோக் பால் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் லோக் பாலே இல்லை என்கிறபோது. லஞ்ச ஊழல் தடைச் சட்டமும் செயல் இழந்த நிலையில் கிடப்பில் போடப் பட்டிருக்கிறது.

ஊழலை வெளிக்கொணர்வோரைப் பாதுகாக்கும் சட்டம்
அடுத்து, ஊழலை வெளிக்கொணர் வோரைப் பாதுகாக்கும் சட்டம். இந்தச்சட்டம் 2014ஆம் ஆண்டில் நிறைவேற்றப் பட்டிருந்தபோதிலும். இதனை அமல் படுத்தக் கூடியவிதத்தில் இதற்கான விதிமுறையை இன்னமும் மோடி அரசாங்கம் அறிவிக்கவில்லை. இதில் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய மற்றுமொரு விசயம் என்னவெனில் இச்சட்டத்திற்கு மோடி அரசாங்கம் சில திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இதன்பிரகாரம் இனி எவரும் ஊழல் குறித்த விசயங்களை அரசின் கவனத்திற்கு கொண்டுவர மாட்டார்கள். இந்தத் திருத்தங்களின்படி தேசிய நலன்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான பகுதிகளில் ஊழல்கள் நடைபெறுமானால் (உண்மை யில் அங்கேதான் மிக அதிக அளவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது) அவற்றிற்கு விதிவிலக்கு அளித்திட வேண்டும் என்று கூறியிருக்கிறது. அவ்வாறு எவரேனும் வெளிக்கொண்டுவந்தார்களானால் அவர்களுக்கு இந்தச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் தெளிவாக்கி இருக்கிறது.

கறுப்புப் பணம்
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட் டிருக்கிற கறுப்புப் பணத்தை மீண்டும் நம் நாட்டுக்குக் கொண்டுவருவோம் என்று மோடி அளித்த உறுதிமொழி என்ன வாயிற்று? எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தைப் போலவே மோடி அரசாங்கமும் கறுப்புப்பண முதலைகள் குறித்த விவரங்களை மக்களுக்குத் தெரியாமல் மறைப்பதில்தான் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. உச்சநீதிமன்றம்தான் கறுப்புப் பணத்தை மீண்டும் நம் நாட்டிற்குக் கொண்டுவருவதற்காக ஒரு சிறப்புப்புலனாய்வுக் குழுவை அமைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, சமீபத்தில் பனாமா ஆவணங்களின் அடிப்படையிலும் வெளிநாடு களில் பணம் பதுக்கி வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இந்திய அரசாங்கம் தயாராக இல்லை.

பாஜக தலைவர்கள்
நாடாளுமன்றத்தில் 2015 மே 1 அன்றுமத்திய அரசு கணக்கு மற்றும் தணிக்கைத்தலைவர் (சிஏஜி ) ஓர் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் அரசாங்கத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளை மீறி புர்த்திசகார் கர்கானா அமைப்பின் இயக்குநர்கடன்கள் பெற்றிருந்தார் என்று கூறியிருந் ததுடன் அதில் நிதின் கட்காரியின் பெய ரையும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் தொடர்பாக அதில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் சிவ்ராஜ் சவுஹான் குறித்தும் எந்த நடவடிக்கை யும் கிடையாது. லலித் மோடி ஊழலில் அடிபட்ட இதர தலைவர்களான வசுந்தரா ராஜே மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மீதும் எந்த நடவடிக்கையும் கிடையாது. கர்நாடகாவின் பாஜக தலை வராக எடியூரப்பா மீண்டும் வந்திருப்ப திலிருந்தே பொதுவாழ்வில் ஊழலில் திளைப்பவர்களுக்கு எதிராக அது எந்த அளவிற்கு மதிப்பு வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச் சத்து திட்டத்தில் (ஐசிடிஎஸ்) ஏழைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய கடலைமிட்டாய் வாங்கியதில் ஊழல் செய்த மகாராஷ்டிரா அமைச்சர் பங்கஜ் முண்டே மற்றும் நில பேர ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏக்நாத் கட்சே ஆகியோர் மீதும் எந்த நடவடிக்கையும் கிடையாது. அவர்கள் அனைவருமே பாஜக தலைமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில்தான் கட்சே ராஜினாமா செய்தார்.இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? எப்படியோ மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டோம். மீதம் உள்ள ஆண்டுகளிலும் நன்கு உண் போம், குடிப்போம், சந்தோஷமாக இருப்போம் என்ற முறையில்தான் கடந்த இரண்டு ஆண்டுகளையும் அவர்கள் கழித் திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஒரு இணையப் பக்கத்தில் வெளியாகியுள்ள கட்டுரை

தமிழில் : ச. வீரமணி

Check Also

கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ...

Leave a Reply