மோடி என்றால் ஏமாற்று என்று பொருள் – சு.வெங்டேசன்

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, தாமஸ் மன்றோ, நெல்லைக்கு வந்தார். தாமிரபரணி ஆற்றுப் பகுதியை பார்வையிட்டார். நன்றாக விவசாயம் நடைபெற்று நெல் அதிகமாக விளைகிறது. பின்பு, ஏன் வரி மட்டும் குறைவாக வருகிறதே என எண்ணி, உடனடியாக கணக்குகளை கொண்டு வரச் சொன்னார். அப்போது, அந்த கணக்கு முழுவதும் மராட்டிய பார்ப்பனர்கள் மட்டும் படிக்கக்கூடிய ‘‘மோடி’’ எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.

இதைக்கண்ட தாமஸ் மன்றோ, இந்த மோடி எழுத்திலான கணக்குகள் இருக்கவே கூடாது. அதை 3 மாதங்களிலேயே மாற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதிலிருந்தே தெரிகிறது மோடி என்றால் ஏமாற்றுவது என்று. நவம்பர் புரட்சி தின நூற்றாண்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டாடி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த புரட்சி இந்தியாவிற்கு தெரிந்தது. உலக இலக்கியவாதிகள் அதை பேசினர். 1905 ஆம் ஆண்டு புரட்சி தோல்வியடைந்தது. லெனின் பனி படர்ந்த துருவப்பகுதியில் தலைமறைவாகியிருந்தார்.

அப்போது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என திலகர் தெரிவித்தார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து மும்பையில் தொழிலாளி வர்க்கம் பேரணி நடத்தியது. இதை, லெனின் தனது இஸ்க்ரா பத்திரிகையில், இந்திய தொழிலாளி வர்க்கம் அரசியலில் பக்குவப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் தொழிலாளிகள் எழுச்சி ஏற்படும் என எழுதினார். நெல்லையில் வ.உ.சி கைது செய்யப்பட்டதற்காக தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். அக்டோபர் புரட்சியை பற்றி உலகிலேயே முதன் முதலில் கவிதை பாடியவர் பாரதி.

உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரு பக்கம் இடி. லெனினுக்கு லட்சம் பக்கம் இடி. இப்படி ஒரு கட்சி ஏன் இந்தியாவில் உருவாகவில்லை என பாரதி எழுதினார். நவம்பர் புரட்சிக்கும் இந்தியாவிற்கும் தொடர்பு உள்ளது. ரஷ்யர்கள் தங்களது நாட்டை தந்தையர் நாடு என்றே அழைப்பார்கள். எனவே, மக்சீம் கார்க்கி, தாய் நாவலில் ஒரு பெண் புரட்சிக்கு எப்படி தலைமை தாங்குகிறார் என்பதை விவரித்துள்ளார். இதையே, பாரதியார் அப்படியே புரட்டிப் போட்டு, எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே புது சக்தி பிறக்குது மூச்சினிலே எனப் பாடினார்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...