யானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்!

பினராயி விஜயன்
கேரளா முதல்வர்

பாலக்காடு மாவட்டத்தில் ஒரு சோகமான நிகழ்வில் கருவுற்றிருந்த யானை உயிரிழந்தது குறித்து பலரும் கவலையும் கோபமும் நம்மிடம் தெரிவித்தனர். இந்தக் கவலையும் கோபமும் வீண் போகாது. நீதி நிலைநாட்டப்படும்.

விசாரணை நடந்து கொண்டுள்ளது. காவல்துறையும் வனத்துறையும் கூட்டாக விசாரணை செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். மூன்று சந்தேகத்துக்குரிய நபர்கள் விசாரணை வளையத்தில் உள்ளனர். தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் நீதி நிலை நாட்டப்படவும் தேவையான அனைத்தும் செய்யப்படும்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே அதிகரிக்கும் மோதல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். காலச்சூழல் மாற்றம் உள்ளூர் மக்கள் மற்றும் வனவிலங்குகள் இரு தரப்பையும் பாதிக்கிறது.

ஆனால், இந்த சோகமான நிகழ்வை சிலர் வெறுப்பு பிரச்சாரத்துக்கு பயன்படுத்த முனைகின்றனர். பொய்களையும் பாதி உண்மைகளையும் ஜோடித்து சிலர் உண்மைகளை திரிக்க முயல்கின்றனர். ஒரு சிலர் மத வெறுப்பையும் திணிக்க முயல்கின்றனர்.

கேரளம் மீதும் மலப்புரம் மீதும் இழிவை உருவாக்க அவதூறு பிரச்சாரம் நடக்கிறது. மத்திய மந்திரிகளும் இதில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்வுகள் பற்றிய மதிப்பீடில் தவறு இருக்குமானால் அதனைச் சரி செய்ய கோரலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. எனவே, அவர்களது பொய் பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது என்பது தெளிவாகிறது.

அநீதிக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்துவது என்பதை கேரள சமூகம் எப்பொழுதுமே மதிக்கிறது. அநீதிக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் எங்கும் எப்பொழுதும் போராடுபவர்களாக நாம் இருப்போம்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...