லால்சலாம் – ஜெய்பீம் முழக்கங்களை “புரட்சி ஓங்குக” என்று மாற்ற வேண்டும் – தோழர் சீத்தாராம் யெச்சூரி

லால்சலாம் – ஜெய்பீம் முழக்கங்களை “புரட்சி ஓங்குக” என்று மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. இங்கே நடைபெற்றுள்ள மகாஜன நடைபயணம் உலக வரலாற்றில் நாம் கண்ட மாவோவின் நெடும்பயணத்தோடுதான் ஒப்பிடத் வேண்டும். தெலுங்கானாவுக்கு பொற்காலத்தை உறுதி கொடுத்த முதலமைச்சர், தன் வாக்கை நிறைவேற்ற முடியாமல் படுதோல்வியுற்றுள்ளார். தெலுங்கானா புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் தீப்பந்தந்தத்தை ஏந்தி முன்சென்றவர்கள் நாங்கள். தெலங்கானா நிலச்சீர்திருத்தத்தை தேசிய பிரச்சனையாக முன்னுக்கு கொண்டு வந்தது. இப்போது இங்கே மீண்டும் எழுந்துள்ள நில உரிமைக்கான முழக்கம், தேசமெங்கும் எதிரொலிக்கும்.

முஸ்லிம் வெறுப்பை கக்குவதிலிருந்து தன் வாயையே தடுக்க முடியாத யோகி ஆதித்யானந், தற்போது உ.பி முதல்வராக உள்ளார். அவரை முதல்வராக்கியிருப்பதன் மூலம் இந்து ராஷ்ட்ரம் அமைக்கும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலையே பாஜக வெளிப்படையாக்கியுள்ளது.

நாம் இங்கே கூடி முன்வைத்துள்ள சமூக நீதி முழக்கம், சாத்தியமாகாத வகையில் தூரத் தள்ளப்படுகிறது. எஸ்சி/எஸ்டி துணைத் திட்டத்தை முன்வைத்த திட்டக் கமிசன் தற்போது இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் தற்போது மிகப்பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

இந்த சூழ்நிலையில்தான் நாம் சமூக நீதிப் போராட்டத்தில் நமது உறுதியைக் காட்டுகிறோம். சமூக நீதியை நிலைநாட்ட நாடு தழுவிய இயக்கத்தை கட்டி எழுப்பும் நம் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறோம்.

Check Also

உழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்!

வரலாற்றில் எத்தனையோ முக்கிய நிகழ்வுகளை கண்டுள்ளது கோவை நகரம். ஆனால், அவற்றில் ஒரு சில நிகழ்வுகளே, உலகறியச் செய்தவை. அப்படிப்பட்ட ...