வராக்கடன் தள்ளுபடி செய்யவில்லையா? – அருண் ஜேட்லிக்கு யெச்சூரி கேள்வி

பாஜக அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 78 கோடி  கடன்கள் பற்றி நேற்றைய நாடாளுமன்ற உரையின்போது தோழர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். அப்போது தலையிட்ட நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவையெல்லாம் தள்ளுபடி அல்ல “write offs” என விளக்கம் கொடுத்து, வங்கிக் கணக்குகளில் அந்த தொகை இருக்காது, ஆனால் நாங்கள் வசூலிப்பதை நிறுத்த மாட்டோம் எனவும் தெரிவித்தார். அது முழுமையான உண்மை அல்ல என்பதை தெளிவாக்கியுள்ளார் யெச்சூரி. அவை பின்வருமாறு;

வங்கிப் புத்தகங்களில் இருந்து எடுத்துவிடுவது என்றால் என்ன?…

வங்கிகள் தங்களுடைய வரவு செலவை இந்த கடன்கள் பாதிக்காது என்று ஆன பிறகு, அதனை வசூலிப்பதில் அக்கறை காட்டமாட்டார்கள் என்பதுதான் அதன் பொருளாகும்.

அமைச்சர் பேசும்போது write-off என்பது செயல்படும் சொத்துக்கள் என்பது செயல்படாத சொத்துக்களாக (Nonperforming asset) மாற்றப்படுவதாக சொன்னார். அது உண்மையல்ல. நான் பெர்பார்மிங் அசெட்டுகள் ரைட் ஆப் செய்யப்பட்டிருப்பதாக சொல்வது தவறாகும். ஒரு கணக்கை நான் பெர்பார்மிங் அசெட்டாக மாற்றுவதற்கான விதிமுறைகள் அமைச்சருக்கு தெரியாவிட்டால் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை அவர் (sections 3.5, 5.9 and 5.10 of Master Circular on “Prudential Norms on Income Recognition, Asset Classification and Provisioning – Pertaining to Advances”) படிக்க வேண்டும். தான் பேசியது சரியா என்பதை அமைச்சர் சரிபார்க்க வேண்டும்.

இப்போது ரைட் ஆப் குறித்து பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு கொடுத்த விளக்கத்தில் ‘கணக்குப்படி ரைட் ஆப் செய்யப்பட்ட கடன்களில், இனிமேல் வசூலிக்கும் கடன்களும் உள்ளன’. அதாவது மொத்தத்தில் ஒரு பகுதியைத்தான் இனி வசூலிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் கே.சி.சக்ரவர்த்தி சொல்லும்போது, ஆவணப்படி ரைட் ஆப் செய்யப்பட்ட கடனை, ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட கடனை வசூலித்தால் வங்கிக்கு இன்செண்டிவ் எதுவும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் நிச்சயம் வசூலிப்போம் என்று வாய்ச்சவடால் விடும் நமது நிதியமைச்சரிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். கடன் கொடுக்காமல் ஏமாற்றிய பெரும்பணக்காரர்களில் தண்டனை பெற்றிருப்பவர்களின் சதவீதம் 1.14 சதவீதம் மட்டுமே ஆகும். சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது. ரைட் ஆப் செய்யப்பட்ட கடன்கள் வசூலிக்கப்படும் என நிதியமைச்சர் சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுதான்.

ரைட் ஆப் செய்யப்பட்ட கடன்களில் எவ்வளவை வசூலித்திருக்கிறோம் என்று நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது நிதியமைச்சரின் கடமை. இல்லையென்றால், அரசின் மோசமான நண்பர்களுக்கு மக்களின் நல்ல பணம் எடுத்துக் கொடுக்கப்பட்டது என்றாகும்.

 

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...