வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதை திரும்பப் பெற சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

வழக்கறிஞர்கள் மீது நீதிபதிகள் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதை திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் என்ற சட்ட அதிகாரம் படைத்த அமைப்பு இருக்கிறது. தேவைப்பட்டால் அதன் செயல்பாட்டை சீரமைக்கலாம். மேலும், தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் நீதிமன்ற அவமதிப்பு பிரிவு மூலம் நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.  இச்சூழலில், மேற்கூறிய சட்டத்திருத்தம் தேவையற்றது. ஜனநாயக விரோதமானது.

நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் நீதித்துறையின் இரு கண்கள். இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒன்றை மட்டும் பலவீனமாக்குவது  நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதிக்கும்.  பிரச்சனை ஏற்படுகிறபோது, நீதிபதிகளும், வழக்கறிஞர்களின் பிரதிநிதிகளும் கூடி விவாதித்து  பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்கலாம். எனவே, மேற்படி சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

மனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…

அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...