விசாரணைக்கு அழைத்து வாலிபர் சுட்டுக் கொலை மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே உள்ள மருகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வானமாமலை என்பவரை விசாரணைக்கு அழைத்து, நாங்குனேரி போலீஸ் இன்பெக்டர் ராஜ்குமார் துப்பாக்கியால் சுட்டதால் நெஞ்சில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என செய்தி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கிராமத்திற்குச் சென்று விசாரித்துள்ளனர்.

காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மருகால்குறிச்சி கிராமத்தில் சில மாதங்களாக, முன் அனுமதியின்றி செங்கல் சூளைக்காக குளத்து மண் அள்ளப்பட்டு வந்துள்ளது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த வானமாமலையும் ஈடுபட்டுள்ளார். இதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மாமூல் கேட்டபோது வானமாமலை மாமூல் கொடுக்க மறுத்துள்ளதாகத் தகவல் வருகிறது. இதற்காகவே அவரை விசாரணைக்கு என்று அழைத்து சுட்டுக் கொண்டிருக்கிறார் நாங்குனேரி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்.

இந்த என்கவுண்ட்டர் கொலை முழுக்க முழுக்க மனித உரிமையை மீறிய செயலாகும். என்கவுண்டர் நடத்திய நாங்குனேரி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மீது மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து உடனடியாக முழுமையான நீதிவிசாரணை நடத்திட வேண்டுமெனவும் மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட வானமாமலை குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும்  தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது,

Check Also

மருத்துவப் பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில் – தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – ...

Leave a Reply