விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கிட கோரி தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) கடிதம்

அன்புடையீர்! வணக்கம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள், விசிக பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான திரு. ரவிக்குமார் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கிட கோரி, தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இன்று (31.08.2018) கடிதம்.


31.08.2018

பெறுநர்
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:-    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ரவிக்குமார் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட கோருதல் தொடர்பாக:

நாடு முழுவதும் மாற்றுக் கருத்துக்கள் தெரிவிக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்கட்சியினர் கடுமையாக அச்சுறுத்தலுக்கு ஆளாகி, படுகொலைசெய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான திரு. ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அச்சுறுத்தலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது தமிழக அரசின் அவசர கடமையாகும்.

மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் தடுத்திட திரு. ரவிக்குமார் அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,
/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன்)
மாநில செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...