விசைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.15/- மின் கட்டண உயர்வை ரத்து செய்க!

கோவை மாவட்டக்குழுவின் பத்திரிகைச் செய்தி;

விசைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.15/- மின் கட்டண உயர்வை ரத்து செய்திட  தமிழக அரசிற்கு சிபிஐ(எம்) கோரிக்கை;

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது, பல்லாயிரக்கணக்கானோருக்கு  வேலை வாய்ப்பையும். பொருளாதரத்தில் முக்கிய பங்களிப்பைச் செலுத்தி வரும் விசைத்தறி தொழில்.  தற்போது துணி தேக்கம் மற்றும்முள்ள பல்வேறு காரணங்களால் தொழில் நெருக்கடியில் இருந்து வருகிறது.

இந்த நிலைமையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் விசைத்தறி கூடங்களுக்கு 15 சதவீத மின் கட்டண உயர்வை அறிவித்து அமுலாக்கியது, இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் விசைத்தறிகளுக்கு அறிவிக்கப்பட்ட 15 மின் கட்டண உயர்வை மானியமாகவழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அறிவித்தப்படி விசைத்தறி கூடங்களுக்கு மானியம் வழங்கப்படர்மல் 15 சதவீதம் கட்டண உயர்வுடனேயே விசைத்தறி கூடங்களுக்கு மின் மீட்டரில் கணகெடுப்பு செய்யப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிவித்த மானியத்தை வழங்காத தமிழக அரசின் நடவடிக்கை விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எனவே விசைத்தறிகளுக்கு 15 சத மின் கட்டண உயர்வு என்பது இத்ததொழிலை மிகக் கடுமையான நெருக்கடியின் தள்ளிவிடும். கடந்த 7 ம் தேதி முதல் விசைத்தறி உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இப்போராட்டத்தை மாநில அரசு உணர்ந்து போராடும் விசைத்தறி உரிமையாளர்களின் உனர்வுகளைக் கணக்கில்லெடுத்து 15 ரூ மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் ஜனநாய ரீதியில் விசைத்தறி உரிமையாளர்ளை நடத்தும் போராட்டங்களை காவல்துறை கொண்டு ஒடுக்க கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ராஜாங்கம் காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தொழிற்சங்க தலைவர் தோழர் எம்.ராஜாங்கம் 21.7.20 அன்று  மதியம்  சுமார் 12.00  மணியளவில் ...