விலைவாசி உயர்வும் – உணவு பாதுகாப்பின்மையும்!

மார்க்சிஸ்ட்  கட்சிக்கு வாக்களிப்பீர்

இடதுசாரிகளை பலப்படுத்துவீர்

விலைவாசி உயர்வும் – உணவு பாதுகாப்பின்மையும்             

 

ஒவ்வொரு நிமிடமும் பசிக்கொடுமையால் இறக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஐந்து. இதன்படி ஒருநாளைக்கு கணக்கிட்டால் இந்தியாவில் பட்டினியால் மரணமடைவோரின் எண்ணிக்கை 7000. ஓராண்டில் இந்தியாவில்  25 லட்சம்  மக்கள் பசிக்கொடுமைக்கு பலியாகின்றனர்.  இந்தியா வளர்கிறது .. வளர்கிறது.. என்கிறார்களே – அந்த வளர்ச்சிக் கதையின் கசப்பான உண்மை இதுதான்.  (ஆதாரம்-உலக உணவுத்திட்டம்)              

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினால் மட்டுமின்றி,  இதற்கு முன்பாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின்  ஆட்சியிலும் சரி கடைபிடிக்கப்பட்டு வந்த நவீன தாராளமயக் கொள்கைகளை தொடர்ந்து நீடிக்கும் உணவுப் பற்றாக்குறை, பட்டினி ஆகியவற்றுக்கே இட்டுச் சென்றுள்ளன. அத்துடன் உணவு பண்டங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு என்ற தாங்கமுடியாத சுமை மக்கள் தலைகளின் மீது ஏற்றப்பட்டது. 1990 களின் துவக்க ஆண்டுகளிலிருந்து நடைபெற்று வருவது இதுதான். 1990 களின் துவக்க காலம் வரை இருந்த அனைவருக்குமான பொதுவிநியோகமுறை திட்டமிட்ட முறையில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. இது காலப்போக்கில் வெட்டி சுருக்கப்படுவதையே இக்காலத்தில் நாடு கண்டது. பசிக்கொடுமைக்கு ஆளானோர் எண்ணிக்கையிலும், பணவீக்கத்திலும் இந்தியாவே இன்றைய தினம் உலக அளவில் உச்சத்தில் இருந்து வருகின்றன. சொல்லப்போனால், சகாரா பாலைவனத்தையொட்டிய மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுவதைவிடவும் மிகவும் மோசமான பட்டினிக் கொடுமை இந்தியாவில் காணப்படுகிறது. உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலோர் வசிக்கும் நாடு என்ற பெருமையைக் கொண்ட நாடாக  இந்தியா இன்று திகழ்கிறது.

ஓயாமல் விண்ணோக்கிப் பாயும் பணவீக்கம்:-

 உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பண்டங்களின் ஓயாத விலையேற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கு கையாலாகாத அரசாக காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு இருந்து வந்துள்ளது. அதன் மிகப்பெரும் தோல்விகளில் இதுவும் ஒன்று. 2007 ம் ஆண்டு  தொடங்கி நெடிய ஏழாண்டுகாலமாக இந்திய நாடு உணவு, பணவீக்கத்தில் தொடர்ச்சியான இரட்டை இலக்கத்துடன் அதாவது பத்து சதத்துக்கு மேலான விலைவாசி உயர்வு என்ற சாதனையுடன் வாழ்ந்து வருகிறது. இதன் விளைவாக நுகர்வோர் விலைவாசிப்புள்ளியும்,  மொத்த விலைவாசிப்புள்ளியிலும் மிகவும் உயர்மட்டத்தை எட்டியது. குறிப்பாக காய்கறிகளின் விலை மிக மிக அதிகமாக இருந்துவந்துள்ளது. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூபாய் 100 என்ற அளவை  எட்டியதையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.           

நுகர்வோரின் விலைவாசிப்புள்ளி அடிப்படையிலான பணவீக்கம் ஆண்டுதோறும் 9 சதத்யும்விட கூடுதலாக இருந்துவந்துள்ளது. கடந்த சில மாதங்களில் உலக அளவில் உணவுப் பண்டங்களின் விலைகள்வீழ்ச்சியடைந்து வந்த நேரத்திலும் இந்தியாவில் உணவுப் பண்டங்களின் விலைகள் அதிகரித்தன. ஜி-20 நாடுகளிலேயே நுகர்வோர் விலைவாசிப்  பணவீக்கத்தில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.  பிற ஆசிய நாடுகளின் நிலைமையையும் சேர்த்து எடுத்துக்கொண்டாலும் இதே நிலைதான். பிரேசில், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, சீனா. இந்தியா ஆகியவை அடங்கி பிரிக் நாடுகள் குழுமத்தில் மிகவும் அதிக விலைவாசிப்புள்ளி குறியீட்டைக் கொண்ட நாடு இந்தியாதான்.

நுகர்வோர் விலைவாசிப் புள்ளி பிரிக் நாடுகள்:- 

பிரேசில்                     6.1

ரஷ்யா                       6.5

தென்னாப்பிரிக்கா      6.4

சீனா                         2.6

இந்தியா                   10.7

ஜி – 20 நாடுகள் – ஆசியா ஜப்பான்    0.9

கொரியா                    1.5

சீனா                          2.6

சவுதி அரேபியா          3.7

இந்தோனேசியா         8.5

இந்தியா                   10.7                       

(சர்வதேச நிதிப்புள்ளி விபரங்கள்-ஆகஸ்ட்-2013)

விலைவாசி உயர்வு என்பது உலக அளவில் நடைபெறும் ஒன்றுதான் என்று அதனை அரசாங்கம் நியாயப்படுத்த முனைவது முற்றிலும் தவறானது. பிற ஜி-20 நாடுகளைச் சேர்ந்த மக்களைவிட இந்திய மக்கள் விலைவாசி உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை நிலை.              

ஆனால் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையின் மீது விலைவாசி உயர்வின் தாக்கம் மிகவும் கடுமையானதாக உள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைவாசிப் புள்ளி இடைவிடாமல்  அதிகரித்து வருகிறது. 2010 ம் ஆண்டுமுதல் 2013 ம் ஆண்டுக்கு இடையிலான மூன்றாண்டுகளில் இப்பகுதியினருக்கான விலைவாசி உயர்வு 34.08 சதம் ஆகும்.               

உணவுப் பண்டங்கள் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவற்றின் விலைவாசி தொடர்ந்து அதிகரித்துவரும் நேரத்தில்  பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டதாக ஐ.மு.கூட்டணி அரசு வெட்கமின்றி தற்போது தம்பட்டமடித்து வருகிறது. பணவீக்க விகிதத்தை மொத்த வணிக விலையின் அடிப்படையில் கணக்கிட்டுக் கூறி பணவீக்க விகிதம் 5.05 சதமாக குறைந்துவிட்டதாக மக்களை அரசாங்கம் ஏமாற்றி வருகிறது. (இந்த விலைகளுக்கு நுகர்வோருக்கு பொருட்கள் ஒருபோதும் கிடைக்காத நிலையில் சாமானியர்களுக்கும் இந்த பணவீக்கத்துக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை.) உண்மையான விலைவாசி நிலவரத்தை நுகர்வோர் விலைவாசிப் புள்ளியே (சாமானிய மக்களால் உண்மையில் அளிக்கப்படும் சில்லரை விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படுவது) பிரதிபலிக்கும் என்பதால் பணவீக்கம் குறித்த அரசின் கூற்று மக்களை பாதிக்கும். உண்மையான விலைஉயர்வை மூடிமறைப்பதற்கான அரசியல் வார்த்தைஜாலம் அன்றி வேறில்லை. சொல்லப்போனால் மொத்த வணிக விலையை பொறுத்தவரையிலும்கூட பணவீக்க அதிகரிப்பு வேகம் குறைந்து வருகிறது என்றுவேண்டுமானாலும் கூறலாம். இதற்கு மொத்த வணிக விலைகள் குறைந்துவிட்டன என்பது பொருளல்ல. மாறாக மொத்த வணிக விலை மெதுவாக அதிகரித்து வருகின்றது என்பதேயாகும்.             

விலைவாசி உயர்வுக்கு மக்களையே குற்றம் சொல்லும் தவறான போக்கு, ஓயாத விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி வைப்பதில் தனது முழுத் தோல்வியை மூடிமறைப்பதற்காக மக்களின் மிதமிஞ்சிய தேவையே பணவீக்கத்தைத் தூண்டிவிட்டதாகக்கூறி மக்களை ஏமாற்றுவதற்கு ஐ.மு. கூட்டணி அரசாங்கம் முயற்சித்தது. 77சதம் மக்கள் அன்றாடம் ரூ 20க்குக் குறைவாக செலவிடும் ஒரு நாட்டில் ஐ.மு.கூட்டணி அரசாங்கம் வேட்கங்கெட்ட முறையில் இவ்வாறு கூறிவருவது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் செயலாகும்.             

பெட்ரோல், டீசல், உரங்கள், பிற விவசாய இடுபொருட்கள் போன்றவற்றின் விலைகளையும், மின்சாரம் வழங்கல், போக்குவரத்து போன்ற பணிகளுக்கான கட்டணங்களையும் அதிகரிக்கும் அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாகவே விலைவாசி உயர்வு உண்மையில் ஏற்படுகிறது. மானியங்களைக் குறைத்ததும், பொருட்களின் அடக்கவிலையை அதிகரித்து  உணவுப் பண்டங்களின் விலைகளின்மீது அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.                           பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டது. எண்ணெய் கம்பெனிகளின் மிதமிஞ்சிய லாபத்தை அதிகரிப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் விளைவாக போக்குவரத்து செலவுகள், அனைத்து உற்பத்தி செலவுகள் மற்றும் சில்லரை விலைகள் தொடர்ந்து அதிகரித்ததனால் தொடர்ச்சியான விலைவாசி உயர்வுக்கு இட்டுச்சென்றுள்ளது. ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் பெட்ரோலின் விலை 18 முறை உயர்த்தப்பட்டது.             

ஐ.மு.கூட்டணியின் பத்தாண்டுகால ஆட்சியில் டீசல் விலைகள்அநேகமாக மும்மடங்கு என்ற அளவுக்கு உயர்ந்துள்ளன. 2004 ஜனவரியில் ரூ 20 ஆக இருந்த டீசல் விலை (டெல்லி நிலவரம்) 2013 டிசம்பரில் ரூ 55 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலையும்கூட இருமடங்கு அதிகரித்துள்ளது. 2004 ஜீனில் ரூ 35 ஆக இருந்த பெட்ரோல் விலை (டெல்லி நிலவரம்) 2013 டிசம்பரில் ரூ 70 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் ஏற்பட்ட விலைவாசி உயர்வே இந்த உயரிய விலைகளுக்குக் காரணம் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்தது. ஆண்டுக்கு ஆண்டு  அதிகரிக்கப்பட்ட சுங்க வரிகள், வாட் வரி, கலால் வரி  பல்வேறு மத்திய, மாநில வரிகள் மூலம் பெட்ரோலின் அடிப்படை விலை 40 முதல் 66 சதமும், இதே காரணத்தினால் டீசலின் அடிப்படை விலை 20 முதல் 30 சதம் வரையிலும் அதிகரிக்கப்பட்டது என்ற உண்மை மூடிமறைக்கப்பட்டுள்ளது.            

டாலர் மற்றும் இதர பெரிய நாட்டு நாணயங்களுக்கு ஈடான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுவரும்  வீழ்ச்சி  தொடர்பான பிரச்சனையில் அரசாங்கம் காட்டிய மெத்தனப் போக்கும் பணவீக்க அதிகரிப்புக்கு காரணமாக இருந்துள்ளது. ஏனென்றால் இந்தியா இறக்குமதி செய்ய வேண்டிய எண்ணெய், உரம் போன்ற பொருட்களுக்கு கூடுதல் விகிதத்தில்  பணம் தரவேண்டியுள்ளது. பெரும் செல்வந்தர்களின் ஆடம்பர பொருட் தேவைகளுக்கும், தங்க இறக்குமதிக்கும்  அந்நிய செலாவனியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்ததானது நிலுவைக்கணக்கு பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஊக வணிக மூலதனத்தின் தாராளமய அனுமதிக்கு எதிராகவும் அவற்றின் மீது கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினால் மீண்டும், மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.            

முக்கியமாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய மூலதனச் சந்தையிலிருந்து ஏராளமான தொகையை திடீர், திடீர் என்று வெளியே எடுத்துச் சென்றதே இந்த வீழ்ச்சிக்கான பிரதானக் காரணமாகும். ஆனால் கடும் ஏற்ற, இறக்கம் உள்ள மூலதனச் சந்தைகளை பயன்படுத்திக்கொண்டு ஏராளமான லாபத்தை ஈட்டும்  ஊக வணிகங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே அரசாங்கம் சேவை செய்து வருகிறது.           

முன்பேர வணிகத்தின் மீது எத்தகைய கட்டுப்பாடுகளையும் விதிக்காமை, கருப்புச்  சந்தை, பொதுச் சந்தையிலிருந்து கொள்முதல் ஆகியவற்றின் மூலம் பெரும் வணிகர்கள் மற்றும் உலக மற்றும் தேசிய விவசாய வணிக நிறுவனங்களின் ஊக வணிக செயல்பாடுகள் மற்றும் பதுக்கல் போன்றவற்றுக்கு ஐ.மு.கூட்டணி அரசாங்கம் துணைபோகிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் மேல்நோக்கித் தள்ளப்படும் நிலை ஏற்படுகிறது.

ஓயாத பசிபட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு:-            

இந்தியாவின் பட்டினி நிலை அச்சமூட்டுவதாக உள்ளது என்று சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிலையம் வகைப்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தேசிய மாதிரி சர்வே புள்ளி விபரங்களும் பட்டினி நிலை பரவலாகவும் தொடர்ந்து நீடிப்பதாகவும் உள்ளதையே சுட்டிக்காட்டுகின்றன. செலவு செய்வது அடிப்படையிலான குழுக்களிடையே – உதாரணமாக மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோர் மிகச் சிறிய அளவிலான ஏழ்மை நிலையில் உள்ளோர் ஆகிய பிரிவினருக்கிடையே வேறுபாடுகள் இருந்து வருகின்றன. பிராந்தியங்களுக்கிடையேயும் வேறுபாடுகள் இருந்து வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் மத்தியிலும் அவற்றின் மிகவும் மோசமான செயல்பாடுகள் காரணமாக விரிவான அளவில் வறுமையால் பீடிக்கப்பட்டோர் இருந்துவருவதை தெள்ளத் தெளிவாகக் காண முடிகிறது. 

பட்டினி ஒழிப்பா அல்லது ஏழைகள் ஒழிப்பா?

 

  • கிராமக் குடும்பங்களில் 80 சதத்தினரும், நகர்புறக் குடும்பங்களில் 64 சதத்தினரும் பரிந்துரைக்கப்பட்ட கலோரி அளவைவிட குறைவான அளவு அடங்கிய உணவையே உண்கின்றனர். கிராமப்புறக் குடும்பங்களில் 54 சதத்தினரும், அனைத்து நகர்புறக் குடும்பங்களில் 75சதத்தினரும் பரிந்துரைக்கப்பட்டதைவிட குறைவான அளவிலான புரதச்சத்துக்களை உண்கின்றனர்.
  • அறவே ஏழ்மை நிலையில் இல்லாதவர்கள் எடுத்துக்கொள்ளும் கலோரி அளவில் 60 சதத்தையும் புரதச் சத்துக்களில் 55 சதத்தை மட்டுமே மிகவும் வறிய நிலையில் உள்ள கிராமப்புற ஏழைகள் உட்கொள்கின்றனர். நகர்புறங்களில் மிகவும் ஏழ்மையில் நிலையில் உள்ளோர் மேலே குறிப்பிட்ட அளவில் 63 சதத்தை மட்டுமே உட்கொள்கின்றனர்.
  • நகர்புறங்களில் உள்ள மிகவும் வறிய குடும்பங்கள் தங்களுக்கு தேவைப்படும் கலோரி அளவில் 73 சதத்தையும் புரதச்சத்து தேவைகளில் 70 சதத்தை மட்டுமே உட்கொள்கின்றனர். கிராமப்புறங்களைப் பொறுத்தவரை இந்தமுறை 64 மற்றும் 67 சதம் என்ற மோசமான நிலையாகும். 
  • மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலங்களான பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்தும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரமும் இந்த அம்சங்களில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அரசாங்கம் கூறிவருவதற்கு மாறாக நுகரப்படும் உணவில் ஒரு நாளுக்கான கலோரிகளின் சராசரி அளவு கிராமப்புறங்களில் 1972-73ல் 2246  ஆக இருந்தது.        

2009-10ல் 2020 ஆகக் குறைந்தது. நகர்புறங்களில் இதே காலங்களில் 2107லிருந்து 1946 ஆக குறைந்துள்ளது. பரவலான அளவில் பசியும், பட்டினியும் இந்திய மக்களில் ஒரு பெரும்பகுதியினரை தொடர்ந்து தொல்லைப்படுத்தி வருகின்றன.            

ஊட்டச்சத்துக் குறைவு அனைத்து பிரிவு  மக்கள் மத்தியிலும் மிக. மிக அதிகமாகக்  காணப்படுகிறது. இது தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் பெண்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க வகையில் பரவலாகக் காணப்படுகிறது. வயதிற்கேற்ற உயரம், உயரத்திற்கேற்ற உடல் எடை, வயதிற்கேற்ற உடல் எடை ஆகிய அனைத்து மூன்று வரையறைகளிலும் குழந்தைகள் மத்தியில் ஒப்பீட்டளவில் ஊட்டச்சத்துக் குறைபாடும் ஆரோக்கியமின்மையும் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. குழந்தைகள் மத்தியில் குறைவான உடல் எடை என்பது இந்தியாவில் 40 வளர்முக நாடுகளில் உள்ளதைவிட கூடுதலாக உள்ளது. வங்காளதேசம் மற்றும் நேபாளத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. இந்தியக் குழந்தைகள் மத்தியில் உடல் எடை குறைந்து காணப்படுவது (46 சதம்) சகாரா பாலைவனத்தையொட்டிய 26 ஆப்பிரிக்க நாடுகளின் சராசரி அளவைவிடக் கூடுதலானதாக உள்ளது. சொட்டு சொட்டாக கீழிறங்குதலாலா அல்லது ஆரோக்கியம் கரைந்து போதலாலா?  மழலையர் மத்தியில் இறப்பு விகிதம் 48.9 சதமாகவும், ஐந்து வயதுக்கு  குறைவான குழந்தைகள் மத்தியில் இறப்பு விகிதம் 59.2 சதமாகவும் உள்ளது.  ஐந்து வயதுக்கும் குறைவானக் குழநதைகளில் அநேகமாக சரிபாதிபேர் (48 சதம்) தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வர்களாகவே அல்லது வயதுக்கு  பொருத்தமின்றி மிகவும் குட்டையானவர்களாகவோ அல்லது வளர்ச்சி தடைபட்டவர்களாகவோ இருந்து வருகிறார்கள். இந்தியாவில் ஐந்து வயதுக்குக் குறைவான ஒவ்வொரு ஐந்து குழந்தைகளிலும் ஒரு குழந்தை மெலிந்த தேகத்துடன் அதாவது அவன் அல்லது அவளது உயரத்துக்கு பொருத்தமின்றி மிகவும் மெலிந்து காணப்படுகிறார்கள்.

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளில் 43 சதம்பேர் தங்கள் வயதுக்கேற்ப எடை இல்லாமல் குறைந்த எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.  இந்தியாவில் 6 மாதம் முதல் 59 மாதம் வரையிலான ஒவ்வொரு 10 குழந்தைகளில் 7 குழந்தை ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்களாக  இருக்கிறார்கள். பெண்களில் 36 சதத்தினரும், ஆண்களில் 34 சதத்தினரும் வளர்ச்சிக் குறைவுடன் காணப்படுகின்றனர். உடல் திறட்சிக் குறியீடு (க்ஷஆஐ 18.5 சதத்துக்கும் குறைவாகவும் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு மிகவும்  பரவலான அளவிலேயே காணப்படுகிறது. பெண்களில் சரிபாதிக்கு மேலானவர்கள் (55 சதம்),  ஆண்களில் கால்வாசிப்பேர் (24 சதம்) ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.         

உணவுப் பொருட்கள் அல்லாத அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உணவுச் செலவு ஒதுக்கீட்டின் பெரும்பகுதியை விழுங்கி விடுகிறது.         

நபர் அடிப்படையில் மக்களின் மாதாந்திர உண்மையான நுகர்வுச் செலவு 1972-1973 ல் ரூ 158 ஆக இருந்தது. 2009-10ல் ரூ 220 ஆக அதிகரித்துள்ளது  என்றபோதிலும் சராசரி கலோரி நுகர்வு குறைந்துள்ளது. அரசாங்கத்தின் தவறான கொள்கைகளே முற்றிலும் இதற்கான காரணமாகும். இக்கொள்கைகளின் விளைவாக ஏற்படும் விலைவுயர்வினால் உணவு பொருட்களின் விலையும் உணவு அல்லாத இதர அத்தியாவசிய பொருட்களும் மருத்துவ வசதி ,கல்வி, வாடகை மற்றும் போக்குவரத்துச் செலவு மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன.கல்வி,  மருத்துவவசதி மானியத்துடனான  வீட்டு வசதி மற்றும் போக்குவரத்து மற்றும் பிற சமூகப்பணிகளில் பொது ஒதுக்கீடு செய்வதிலிருந்து  அரசு படிப்படியாக விலகுதல் தொடங்கியதிலிருந்நு  இப்பணிகளின் தனியார்மையம்  ஒரு முக்கிய காரணியாகும் .இது குடும்பச்செலவின் மீது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விலைவுயர்வு    ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கான செலவை மக்கள் வெட்டி சுருக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. பொதுவிநியோக முறையில் ரேசன் பொருட்கள் கிடைப்பதிலிருந்து மேலும் மேலும் அதிக அளவில் விலக்கி வைக்கப்படுவதானது மக்களின் துன்பத்துயரங்களை கூடுதலாக்குகிறது. இதன் விளைவாக மொத்த செலவில் உணவு அல்லாத அத்தியாவசிய பொருட்களுக்கான செலவு  1972-73 ல் 17 சதமாக இருந்தது. 2010 ல் 25 சதமாக அதிகரித்துள்ளது.            

உணவு நுகர்வில் நாட்டின் பெரும்பான்மை மக்கள் தங்களுடைய முழுத்தேவைக்குக்குறைவாகவே உண்டு உயிர்வாழும் ஒரு நாட்டில்  உணவு பாதுகாப்பு அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்ற வாதம்  மிகவும் கட்டாயமானது. ஹிதனை எவராலும் கையை இறுக  மூடி இருக்கக்கூடிய ஒரு நிதி வல்லுநராலும் கூட மறுக்க முடியாது.பரவலான மக்களை வாட்டும் பசிப்பட்டினி இந்திய மக்களில் ஒரு பெரும் பகுதியினரை தொடர்ந்து மிக மோசமாக பாதித்து வருகிறது. மனித வளர்ச்சிக் குறியீட்டுக்கான உலகப் பட்டினி குறியீட்டில் இடம் பெற்றுள்ள 199 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தை வகிக்கிறது.எனினும் அனைவருக்கும் உணவு பாதுக்காப்பு கிடைக்கக்கூடிய ஒரு அமைப்பு முறை சாத்தியமல்ல என்று அரசாங்கம் கூறுகிறது. காரணம் அனைவருக்கும் ஒரே மானிய விலையில் வழங்கக்கூடியகிட்டத்தட்ட அனைவருக்கும் உணவு பாதுகாப்பு திட்டத்தை பராமரிப்பதற்கு போதுமான  உணவோ, நிதியோ நாட்டில் இல்லையாம். இதனைவிட பெரிய ஒரு ஏமாற்று வேலை இருக்கமுடியாது.   உணவு தானியங்கள் போதுமான அளவில் இல்லை என்னும் மாயை: 

அரசாங்கத்தின் பொய் : 1)    

வழங்கலின் கட்டுப்பாட்டு எல்லை :          

ஒரு மானியம் இணைந்த அனைவருக்குமான திட்டத்தை  ஈடுசெய்யக்கூடிய அளவில் தானிய உற்பத்தியோ ,அது கிடைப்பதோ போதுமான அளவில்  இல்லை.              

தற்போது உள்ள அமைப்பு முறை வழங்கலுக்கு தடைகள் கொண்ட அமைப்பு முறை அல்ல.  மிதமிஞ்சிய இருப்பை வைத்திருக்கும் ஒரு அமைப்புதான் என்பதே உண்மையான களச்சூழலாகும்!    விவசாயத்துறை நெருக்கடியில் உள்ளது என்ற போதிலும் (வளரும் கடன்சுமை;  அதிகரிக்கும் மானியங்கள்;  விவசாய சாகுபடியிலிருந்து வெளியேற்றம் ஆகியவை இதை பிரதிபலிக்கின்றன)  2000 களின் மத்தியில் இருந்து ஒரளவு உற்பத்தி வளர்ச்சி இருந்து வருகிறது.  இதன் விளைவாக 2012-2013 விவசாய ஆண்டின் உற்பத்தி ஒரு சாதனை அளவான 25 கோடியே 54 லட்சம் டன்கள் ஆகும்.  தற்போதைய ஆண்டுக்கான உற்பத்தி மதிப்பீடு அதனையும் விட அதிகமான 26 கோடியே 30 லட்சம் டன்கள் .  இந்தியாவின் உண்மையான உற்பத்தி வல்லமையை விட இது மிகவும் குறைவானது என்ற போதிலும் இவை எந்த விதத்திலும் போதாதவை அல்ல.             

உணவு  கிடைப்பதை நபர் அடிப்படையில் கணக்கிட்டால் (நிகர ஏற்றுமதி, விதை, தீவனம், இழப்புகள் ஆகியவற்றை கழித்துவிட்டு கணக்கிட்டால்) 2011 ல் ஒரு நபருக்கு கிடைக்கக்கூடிய உணவு தானிய அளவு 164.9 கிலோ- இது 2008 ன் உச்ச நிலையான 171 கிலோவை விட கணிசமான அளவில் குறைவானதாகும். எனவே கூடுதலான உணவு தானிய உற்பத்தி என்று கூற முடியாது.           

கிடங்குகள் நிரம்பி வழிகின்றன,  வயிறுகள் காய்கின்றன!.  2005-06 ல் 4 கோடியே 20 லட்சத்து டன்களாக இருந்த கொள்முதல்  2012-13 ல் 7 கோடியே 22 லட்சத்து 60 ஆயிரம் டன்களாக அதிகரித்தது.(ராபி பருவக்கொள்முதலுக்கு முன்னர் இந்த  ஆண்டின் கொள்முதல் அளவான 4 கோடியே 28 லட்சம் டன்கள் எட்டப்பட்டுள்ளது. எனவே கொள்முதலானது உயரிய அளவிலும் அதிகரித்து வருவதாகவும் இருந்து வந்துள்ளது.               

அவசர தேவைகளை  சமாளிப்பதற்குத் தேவையான இருப்பைவிட கூடுதலான அளவில் உணவு தானிய  இருப்பு தொடர்ந்து அதிகரித்து அரசாங்கத்தின் கைகளில் குவிந்து கிடந்து அதே நேரத்தில் கொள்முதல் செய்ததை விநியோகிக்க இயலாத நிலை இருந்து வந்தது.  தற்போதைய இருப்பு மற்றும் வழங்கல் சூழ்நிலை மிகவும் சவுகரியமான நிலை என்பதை விட மேம்பட்டதாக உள்ளது. ராபி சாகுப்படிக்குப் பிறகு  இது மேலும் முன்னேற்றமடையும்.  ஒரு குறைந்தபட்ச அளவிலான உணவு தானியங்களை மலிவான விலையில் நாடு முழுவதிலுமுள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் அனைவருக்கும் பொருந்தக்கூடிய விநியோக முறைக்கு ஆதரவாக வாதிடக்கூடிய பொன்னான தருணம் இது.  இந்த நிகழ்வு முறையில் பொது விநியோக முறையை விரிவுப்படுத்த முடியும். 

லட்சக்கணக்கான மக்கள் தினமும் பட்டினிக்கிடக்கும் சூழலில் தானியங்களை சேமித்துவைப்பதற்கான கிட்டங்கி  வசதிகள் போதுமானவை இல்லாததால் தானியங்கள் விரையமாவதும் மக்கிபோவதும் எலிகளுக்கு உணவாவது மான நிலை ஏற்பட்டுள்ளது. இது பெரும் அசவுகரியத்தை ஏற்படுத்தி  அரசாங்கத்தின் மீது ஏளனப் பார்வையை திருப்பிவிடும்  நிலையை தோற்றுவித்துள்ளது.  தானிய இருப்பு அதிகரிப்பதும் , அவை மக்கிப்போகும் நிலையில் பசிபட்டினி நிலையும்,   ஊட்டச்சத்து குறைபாடும் மோசமடையும்.  இந்த ஆபத்தான சூழலை எவ்வாறு விளக்குவது ? இது துன்பியல் சூழலாக இல்லாது இருப்பின் இது வேடிக்ககையான சூழல் என்று குறிப்பிட முடியும் .           

தற்போதைய தானிய இருப்பு 4 கோடியே 27 லட்சம் டன்கள் அதாவது 2013 ஜுன் மாதத்தில் இருந்து 7 கோடியே 70 லட்சம் டன்கள் என்ற நிலையிலிருந்து இது வீழ்ச்சியடைந்துள்ளது. (2012 ல் சாதனை அளவிலான 8 கோடியே 20 லட்சம் டன்கள் விநியோகத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.)  2012-13 ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 கோடியே 63 லட்சத்து 60 ஆயிரம் டன்களில் 5 கோடியே  58 லட்சம் டன்களே விநியோகத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்டன . இவ்வாறு விநியோகத்துக்காக  எடுத்துக்கொள்ளபட்டதிலும்  ஒதுக்கீட்டிலும் தேக்க நிலை இருந்த போது தானிய இருப்பு எவ்வாறு இந்த அளவுக்கு  வீழ்ச்சியடைந்தது?           

இந்திய எலிகளுக்கு அடுத்தபடியாக அந்நிய நாட்டு  கால்நடைகளுக்கும் பன்றிகளுக்கும் முன்னுரிமை அளித்தது!  தனது லட்சக்கணக்கான பசித்த உயிர்களுக்கு உணவிடுவதற்கு பதிலாக கொள்முதல் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக  ஓராண்டில் மட்டும் (2012-13) ஒரு கோடி டன் தானியத்தை வெட்கமின்றி ஏற்றுமதி செய்வது மற்றும் ஏலம் விடும்  நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டது.   2013-14 ஆம் ஆண்டின்  8 மாதங்களில் மட்டும் 30 லட்சம் டன்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டன. ஆக இவ்வாறு 20 மாதங்களில் நம்பமுடியாத பெரும் அளவில்  1 கோடியே 30 லட்சம் டன்கள் வெளியே அனுப்பப்பட்டன. இந்த உணவு தானியங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன .வளர்ச்சியடைந்த நாடுகள் கால்நடை  திவணமாக இவற்றை பயன்படுத்துகின்றன. இவ்வாறு உணவு பாதுக்காப்பு லட்சியத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் பொது விநியோக முறையின் மூலம் உணவு தானிய ஒதுக்கீடுகளை அதிகரிப்பதற்கு பதிலாக வளர்ச்சியடைந்த நாடுகளின் கால்நடைகளின் வயிறுகளை நிரப்புவதற்காக அரசாங்கம் தானியங்களை ஏற்றுமதி செய்துள்ளது. தானியக்  கொள்முதலும் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.  போதுமான நிதி இல்லை என்னும் மாயை :

அரசாங்கத்தின் பொய்:-2     நிதி கிடைபபதில் இடர்பாடுகள் :

அரசாங்கத்திடம் போதுமான பணம் இல்லாத காரணத்தால் மானிய விலையில் தானியங்களை  அனைவருக்கும் வழங்கும் ஒரு திட்டம்    மிகவும் செலவு பிடிப்பதாகவும்,  அரசாங்கத்திற்கு கட்டுப்படியாகாததாகவும் உள்ளது.              

ஏழைகளை பொறுத்தவரை கஜானாகாலி. செல்வந்தர்களுக்கு சலுகைகள் கோடி! விநியோகத்திற்காக  ஒதுக்கப்பட்ட தானியங்களை எடுக்கவேண்டுமானால் பொது விநியோக முறையில் வழங்கப்படும் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின்  விலையை   குறைவான அளவில் வைத்திருப்பது  இன்றியமையாதது.    

பசி,  பட்டினியை  ஒழித்துக்கட்ட வேண்டுமானால் ஒவ்வொரு இந்தியனுக்கும்  பொருந்தக்கூடிய பொதுவிநியோக முறையும்,   அது அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்குவதாக இருப்பது  முக்கியமானது.   ஆனால் உணவு  மானியத்தை குறைக்கக்கூடிய நடவடிக்கையை  அரசாங்கம் சற்றும் கவலைப்படாமல் நடைமுறைப்படுத்தி வருகிறது.  இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொதுவிநியோக முறையின் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழான குடும்பங்கள் என்று ஒரு சிறிய சிறுபான்மையினரையும்  வறுமைக்கோட்டுக்கும் மேலான ஒரு மிகப்பெரும் பெரும்பான்மையினரையும் பிரித்துவைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இந்த திசை வழியில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாக இது இருந்தது.               

வறுமைக்கோட்டுக்கு மேலான மக்கள் தொகையாக வகைப்படுத்தப்பட்ட -வர்களுக்கு  வழங்கப்படும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் மானியம் பெரிய அளவில் சுருக்கப்பட்டது. அதே நேரத்தில் பசி பட்டினியால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களை தவறான கணக்கீட்டு முறையின் மூலம் நியாயமற்ற முறையிலும், தன்னிசையாகவும்  வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களாக  கருதப்பட்டு பிரிக்கப்பட்டதன் மூலம் இந்த விலை அந்த பகுதியினருக்கு தாங்க முடியாததாக மாறியிருந்தது.  இது அரசின் இரண்டாவது  நடவடிக்கை .             

மானியம் இணைந்த தானிய ஒதிக்கீட்டில் மாநிலங்களின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இவற்றால் வறுமைக்கோட்டுக்கு மேலானவர்களையும் உள்ளடக்கிய ஒரு பலமான – அநேகமாக அனைத்து மக்களுக்கும் பொருந்த கூடிய ஒரு உணவு விநியோக முறை கொண்ட மாநிலங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின. 

இது மூன்றாவது  நடவடிக்கை.  இந்த மூன்றும் இணைக்கப்பட்டு மானிய செலவு குறைக்கப்பட்டுள்ளது அதிகரித்து வரும் விலைவாசியையோ , வளர்ச்சியடைந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வேகத்திற்கு ஏற்பவோ, மானியசெலவு முன்னோக்கி செல்லாத நிலை ஏற்பட்டது.  இலக்கு நிரிணயிக்கப்பட்ட முறையானது பசி பட்டினியால் பாதிக்கப்பட்டோர் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டோர் ஆகியோர் அடங்கிய ஒரு விரிவான பகுதி மக்களை காரணமின்றியும் ,நியாயமற்ற முறையிலும் பொது விநியோக முறையில் இருந்து விலக்கி வைப்பதாக அமைந்திருந்தன.            

இதில் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அம்சம் யாதெனில் வறுமைக்கோடு என்பது மிகவும் கீழான நிலையில் வைக்கப்பட்டிருந்தது.  கிராமபுறங்களில் ஒரு நாளுக்கு ரூ 26 , நகர்புறங்களில் ரூ.32 ம் பெறுவோர் வறுமைக்கோட்டுக்குள் வருவதாக வரையறை செய்யப்பட்டது.  அதனால் இந்த ஆண்டுகளில் மிகப் பெரும்பான்மையான ஏழைமக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழான பிரிவினர் என்ற நிலையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.             

இவ்வாறு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பொது விநியோக முறையில் உணவு பண்ட விலைகள் உயர்வாக வைக்கப்பட்டதற்கான உண்மையான நோக்கம் செலவைக்  குறைப்பதும் , நிதி பற்றாக்குறையை குறைப்பதும் ஆகும்.  நிதி பற்றாக்குறைக்கு என்று ஒரு புனிதமான தொடக்க நிலை உண்டு என்ற நகைப்புக்குரிய கருத்தை நாம் ஏற்றுக்கொண்டாலும் கூட  அதனை செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன என்பது தெளிவு.  முக்கிய செலவுகளுக்கு நிதி வழங்குவதற்காக வரி அதிகரிப்பின் மூலம் கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்டுவதும், வரிச்சலுகைகளை வெட்டுவதும் இந்த இரண்டு வழிகளாகும். ஆனால் சாதாரண மக்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிதி ஆதாரங்களை திரட்டுவதை விட முதலீட்டாளர்கள் என்போருக்கு – குறிப்பாக அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஊக்க தொகை அளிப்பதில் பிடிவாதமாக இருக்கும் அரசாங்கத்தால் நினைத்து பார்க்கக்கூட முடியாத ஒன்றாக இவை உள்ளன.            

பல முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில் இந்தியாவின் வரி, மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மிகவும் குறைவானது ஆகும். (தென்னாப்பிரிக்காவின் – 26 சதம் , ரஷ்யாவின் – 23 சதம் , பிரேசிலின் – 25.4 சதம், சீனாவின் – 18.9 சதம் , அமெரிக்காவின் – 28 சதம் ,  ஸ்காண்டிநோவிய நாடுகளின் சுமார் 45-50 சதம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் 15 சதம் என்பது மிகக் குறைவானது ஆகும்.  தேவைப்படும் நிதி ஆதாரங்களை திரட்டுவதில் தங்களின் அப்பட்டமான தோல்வியை மூடிமறைப்பதற்காக வழங்கப்படும் மானியங்களை   இன்றைய விலை நிலவரத்தின் அடிப்படையில் வரும் முழு தொகையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். பணவீக்கத்தால் ஏற்படும் தாக்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை .உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்துடன்  தொடர்புபடுத்த வேண்டிய தேவையையும் அது புறக்கணிக்கிறது.               

உண்மை நிலை யாதெனில் மானியங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1  சதத்துக்கு  குறைவாகவே (ஒராண்டைத்  தவிர) தொடர்ந்து இருந்து வந்துள்ளன. 2000 ஆண்டு காலத்தில் பெரு நிறுவனங்களின் லாபமும்,  வரிவிதிக்கப்பட வேண்டிய வருவாயின் அளவும் மிகவும் வேகமாக உயர்ந்து வந்த நேரத்தில் அவற்றை போல பல மடங்கு அளவுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன. பெரு நிறுவன லாபங்களின் மீதான வரிச்சலுகை மட்டும் உணவு மானிய செலவைவிட கூடுதலாக பெரும்பாலான ஆண்டுகளில் இருந்து வந்துள்ளன.  வரிச்சலுகைகளின் மொத்த தொகை மட்டும் 4 லட்சம் கோடி முதல் 6 லட்சம் கோடி வரை சென்றுள்ளன. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  5 சதம் முதல் 8 சதம் வரை இருந்தது. எனவே அனைவருக்குமான பொது விநியோக முறையை மக்களின் சக்திக்குட்பட்டதாகவும்,  போதுமான அளவிலும் வழங்குவதற்கு தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்ட தொகை  வசூலிக்கப்படாமல் விடப்பட்ட வரிகளில் சுமார் மூன்றில்  ஒரு பங்கு மட்டுமே.  எனவே பிரச்சனை என்பது பணம் இருக்கிறதா? இல்லையா?  என்பதல்ல –  மாறாக கோணலான சமூக முன்னுரிமைகள் , உபரித்  தொகையை திரட்டி மிகவும் அதிகமாக தேவைப்படும் செலவுகளுக்கு திருப்பிவிடுவதற்கான உறுதியின்மையே உண்மையான பிரச்சனையாகும்.

மோடியின் ஆட்சி நடைபெறும் குஜராத்தில் :-           

கோணல்மாணலான சமூக முன்னுரிமைகளிலும் குறிப்பாக உணவு பாதுகாப்பு  தொடர்பான பிரச்சனைகளிலும் குஜராத்தின் நரேந்திர மோடி அரசாங்கத்தின் சாதனை மேலே குறிப்பிடப்பட்டதை போன்றதக்க ஒன்றே.  எழுச்சி மிக்க குஜராத்தை பற்றி அவர் பேசிவருகிறார் . குஜராத்தில் செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான முதலீட்டைப் பற்றி அவர் பெருமையடித்துக்கொள்கிறார்.  ஆனால் இவற்றின் பயன்கள் எதுவும் ஏழைகள் பக்கம் திருப்பிவிடப்படவில்லை.  

இடதுசாரிகள் தலைமையிலான மாநிலங்கள் உள்ளிட்ட பலமாநிலங்கள்  பற்றாக்குறையான தங்கள் நிதி ஆதாரங்களை வைத்துக்கொண்டே உணவு பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் மோடி அரசாங்கம்  அத்தகைய முன்முயற்சி எதனையும் எடுக்கவில்லை.  கேரளாவில் இடது ஜனநாயக முன்னனி ஆட்சியின் போது ஒரு  கிலோ தானியத்தை ரூ .2 என்ற விலையில் மேலும் விரிவான பகுதி மக்கள்  பெறமுடிந்தது.  ஆனால் மிகவும் வளமான மாநிலம் என்று கூறப்படும் குஜராத் மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்குக்   கீழுள்ளவர்களுக்கு இச்சலுகை மறுக்கப்படுகிறது.  வழங்கப்படும் 25 கிலோ கோதுமையில் 13 கிலோ ரூ 2 க்கும் 12 கிலோ ரூ 5.40 என்ற விலையிலும் வழங்கப்படுகின்றன .   அரிசி என்றால் பத்து கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.  அதிலும் 3 கிலோ ரூ 3 என்ற விலைக்கும் 7 கிலோ ரூ 7 என்ற விலைக்கும்  வழங்கப்படுகின்றன.  எனவே 35 கிலோ கோதுமை மற்றும் அரிசிக்கு அட்டைதாரர்கள் ரூ 150 வரை பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் இடது சாரிகள் தலைமையிலான அரசாங்கத்தில் வறுமைக்கோட்டுக்குக்  கீழே  உள்ள அட்டை- தாரர்கள் மொத்த ஒதுக்கீட்டுக்கும் கிலோவுக்கு ரூ 2மட்டுமே  கொடுக்க வேண்டும்.                  

குஜராத் போன்ற ஒரு மாநிலத்தில் எத்தகைய வெட்கக்கேடான கொள்கை கடைபிடிக்கப்படுகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.  உத்திரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ஊட்டச்சத்துக் குறைபாடு அளவு கூடுதலாக உள்ளது. ஊட்டச்சத்துக்குறைவான குழந்தைகளைப்  பொருத்தவரை சட்டிஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களை போன்ற  நிலையே குஜராத்திலும் காணப்படுகிறது.   குஜராத் மாநிலத்தில் அநேகமாக ஒவ்வொரு இரண்டாவது குழந்தையும் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையதாகவும், நான்கில்   மூன்று  குழந்தைகள் இரத்த சோகை பாதிப்புடனும் காணப்படுவதாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஒருயுனிசெப்(ருசூஐஊநுகு)அறிக்கை குறிப்பிடுகிறது. 

குஜராத் மாநிலத்தில் மூன்று தாய்மார்களில் ஒருவர் மோசமான ஊட்டச்சத்துக் குறைபாடுடன் காணப்படுகிறார்.  குழந்தை இறப்பு விகிதம் சமூக முன்னேற்றத்திற்கான ஒரு அடிப்படை குறியீடாக கருதப்படும் நிலையில் 1000 குழந்தைகளுக்கு 44 என்ற உயரிய இறப்பு விகிதத்தைக்  கொண்டதாக குஜராத் உள்ளது எனவும்,  இந்த அம்சத்தில் குஜராத் மாநிலம் மாநிலங்களுக்கிடையேயான  தரவரிசைப் பட்டியலில் 11 வது இடத்தில் உள்ளது என்றும்  இந்திய அரசால் வெளியிடப்பட்ட இந்தியாவில் குழந்தைகள் (2012) அறிக்கை குறிப்பிடுகிறது.   உடல் எடையைக் குறைப்பதற்காக குஜராத் பெண்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கின்றனர் என்று பரிவுணர்ச்சியற்ற முறையில் முதலமைச்சர் கருத்து வெளியிட்டார். எழுச்சி மிக்க குஜராத் மாநிலத்தில் ஏழை மக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கங்கள் மீது காட்டப்படும் வெறுப்புணர்வை பிரதிபலிப்பதாகவே இது அமைந்துள்ளது.

பாதுகாப்புச்  சட்டத்தில் தேசிய உணவுநழுவவிடப்பட்ட வாய்ப்பு

 ஆட்சிப் பொறுப் பேற்று 100 நாட்களுக்குள் தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம் நிறைவேற்றப்படும் என்று அளிக்கப்பட்ட உறுதி மொழி 100 நாட்கள் கழிந்து, அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்து  நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் இறுதியாக நிறைவேற்றப்பட்டது. அப்போது 7 கோடி டன் உணவு தானியங்கள் அரசாங்க கிட்டங்கிகளில் குவிந்து கிடந்தன .   எத்தகைய ஒரு நெருக்கடியை சமாளிப்பதற்கு தேவையான இருப்பினைப் போல நான்கு  மடங்கு  அளவு   இது.  மிதமிஞ்சிய இருப்பு இருந்ததால் வழங்குவதில் எத்தகைய தடைகளும் இல்லாத ஒரு வரலாற்று  சிறப்பு மிக்க வாய்ப்பு இது.  ஆனால் தேவைக்கும், நடைமுறைக்குமிடையே மிகப்பெரும் இடைவெளியை கொண்டதாக இச்சட்டம்அமைத்திருந்தது.  இந்திய குடும்பங்களில் 67 சதம் குடும்பங்களுக்கு மாதத்துக்கு 5 கிலோ தானியத்தை மட்டுமே  இச்சட்டம் உத்திரவாதப்படுத்தியது.  இதன் மூலம் கிராமப்புறங்களைச்  சேர்ந்த 75 சதம் குடும்பங்களும்  நகர்ப்புறங்களைச் சேர்ந்த  50 சதம்  குடும்பங்களும் உத்திரவாதத்தைப் பெற்றன.  ஐசிஎம்ஆர் அமைப்பு 14 கிலோ தானியம் தேவை என்று குறிப்பிட்டதற்கும், இந்தஉத்திரவாதத்திற்குமிடையே மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி  உள்ளது. தானியங்கள் மட்டுமே வழங்கப்படும் என்ற இந்த அணுகுமுறை போதுமானதல்ல.               

இந்த அணுகுமுறையினால் சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது உறுதிசெய்யப்படவில்லை.  இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த சட்ட வரம்பிலிந்து  விலக்கி வைக்கப்பட்டனர் என்பது பரவலான ஊட்டச்சத்து குறைபாடு நிலவிவரும் சூழல் ஒரு பெரும் அநீதி என்பதைக் குறிப்பிட வேண்டும். ஆனால் வரி செலுத்துவோர் மட்டுமே சட்ட வரம்புக்குள்ளிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டுமென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது.               

உணவு பாதுகாப்பு உரிமையை  அனைவருக்கும் வழங்குவதற்கான சட்ட உரிமையை  அளிப்பதற்கு பதிலாக பகுத்தறிவுக்குப்புறம்பான விதத்தில் உணவு பாதுகாப்பு தேவைப்படும் மக்கள் பிரிவினர்  சட்ட வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஒரு புதிய வழிமுறையின் மூலம் உருவாக்கப்பட்டு நீடிக்கிறது. சமூக பொருளாதார-சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் திட்டக்குழு மதிப்பீடுகளுடன் இவற்றுக்கு தொடர்பு உள்ளது என்ற போதிலும் இது தெளிவற்றதாகவே இருக்கிறது.               அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் தொடர்ச்சியான விலையேற்றம், பரவலான அளவில் நீடிக்கும் பசி, பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடால் துன்பத்தில் உழலும் மக்களின் மீது மேலும் சுமையை ஏற்றுவதில் ஐ.மு. கூட்டணி அரசாங்கம் பிடிவாதமாக இருந்து வருகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் விலையுயர்வின்மை  தொடர்பான பிரச்சனைகளில் மிகவும் மட்டமான செயல்திறனைக்கொண்ட காங்கிரஸ்  கட்சி தலைமையிலான அரசாங்கம் மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பிவந்த கீழ்கண்ட கோரிக்கைகளை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்துள்ளது.  எரிபொருள் விலை உயர்வை திரும்பப் பெறுக –  பெட்ரோலியப் பொருட்கள் மீதான மறைமுக வரிகளைக் குறைத்திடுக – விலை நிர்ணயக் கட்டுப்பாடு நீக்கத்தை வாபஸ் பெறுக

 

மானியத்தை அதிகரிப்பதன் மூலம் உர விலைகளைக் கட்டுப்படுத்துக. உணவு மானியத்தை அதிகரிப்பதன்மூலம் அனைவருக்கும் மேலும் கட்டுபடியாகும்  விலையில் கிடைக்கக்கூடிய விரிவடைந்த பொது விநியோக முறையை ஏற்படுத்துக. சர்க்கரை, கோதுமை மற்றும் இதர அத்தியாவசியப் பண்டங்களில் முன்பேர வர்த்தகத்தை தடைசெய்து பதுக்கல்காரர்களுக்கு எதிராக கறாரான நடவடிக்கைகளை எடுத்திடுக. மூலதனப் பாய்ச்சலின் திடீர் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்துவதற்கும், ரூபாய் மதிப்பை ஸ்திரப்படுத்துவதற்கும் கடுமையான பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்திடுக.             

ஊட்டச்சத்துக்  குறைபாடுள்ள லட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள். குழந்தைகள் போன்றோருக்கு ஸ்திரமான விலைவாசி,  உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றை ஒரு மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளின் தொகுதி மட்டுமே உறுதிப்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தெரிவிக்கிறது.              

அத்தகைய மாற்றுக் கொள்கைகளை பாஜகவினாலோ, காங்கிரஸ் கட்சியினாலோ வழங்க முடியாது. உணவு பாதுகாப்பு, உணவு மானிய அதிகரிப்பு, பொது விநியோக முறை அனைவருக்கும் கிடைத்தல் மற்றும் அதனைப் பலப்படுத்துவது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகியவற்றுக்கு தலையாய முக்கியத்துவம் அளிப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் உறுதிபூண்டுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பீர்.

மத்தியில் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசு அமைவதை உறுதிப்படுத்த இடது மற்றும் ஜனநாயக சக்திகளை பலப்படுத்துவீர்.

 

English Version:-

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...

Leave a Reply