விளக்குகளை அணைப்பதன் மூலம் விபரீதத்தை விலைக்கு வாங்குவதா?

அறிவிப்பை திரும்பப் பெற பிரதமருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தி பின்வருமாறு;

ஞாயிறு இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்கும் படி பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோள் நாட்டின் மின் தொடர் அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக எழுந்திருக்கிறது. எல்லா வீடுகளிலும் ஒரே நேரத்தில் மின் தேவை குறைக்கப்பட்டால் அதனால் 15% முதல் 20% மின்சார அழுத்தம் அதிகரித்தால் கூட அது நம் மின் தொடர் அமைப்பை நிலைகுலையச் செய்துவிடும். இந்த நிலைமை மின்வெட்டை நீட்டித்துவிடும். இப்படியான விளைவை நாம் 2012 ஆம் ஆண்டில் ஒருமுறை எதிர்கொண்டுள்ளோம். மக்கள் வீட்டிற்குள்ளேயே அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்படி நடந்தால் என்ன ஆகும் என சிந்தித்துப் பாருங்கள்.

தேசிய மற்றும் மாநில மின் தொடர் முகமையானது மத்திய அரசையும் மாநில அரசுகளையும் இதுபற்றி ஏற்கனவே எச்சரித்துள்ளது. எனவே பிரதமர் தன்னுடைய அழைப்பினை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

மின் தொடர் அமைப்பு நிலை குலையுமானால் அது மின்வெட்டு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும், நோய்த்தொற்றினை எதிர்க்கும் போராட்டத்தில் தடை ஏற்படுத்தும். இப்படி ஒரு சவாலை நாம் இந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. பெருந்தொற்றை எதிர்க்கும் சமயத்தில் இது அவசியமில்லாத ஒன்று.

Check Also

தடுப்பூசி உபகரண ஏற்றுமதி தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் பல்வேறு துணைப் பொருட்களின் பற்றாக்குறையால் தேவையான அளவிற்கு தடுப்பூசிகள் ...