விஸ்வநாதன் ஆனந்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு!

தமிழகத்தைச் சார்ந்த விஸ்வநாதன் ஆனந்த் கடந்த மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த போரிஸ் கெல்பாண்டை வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆவார்.

செஸ் விளையாட்டில் இவர் புரிந்த சாதனைகளுக்காக மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகிற்கு பேரிழப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

மக்கள் மனங்கவர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துவதுடன், ஆழ்ந்த ...

Leave a Reply