வீட்டு வசதிக் கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் அநீதி, நிதியமைச்சர் தலையிட சு.வெங்கடேசன்.எம்.பி.கடிதம்!

மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்கள்,

நிதியமைச்சர்,

புது டெல்லி,

பொருள்: தர்க்க நியாயமற்ற நடைமுறை காரணமாக அநீதிக்கு ஆளாகிற வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் நலன் காக்க வலியுறுத்தி…

வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மிகப் பெரும் இழப்புகளுக்கு ஆளாவதையும், அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.

இது ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றியமைக்கும் போது, ஏற்கெனவே கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் புதிய வட்டி விகிதங்களை மாற்றும் போது அவர்கள் கடைப்பிடிக்கும் தர்க்க நியாயம் அற்ற நடைமுறையால் எழுவதாகும்.

எல்லா வீட்டு வசதிக் கடன்  நிறுவனங்களும் வட்டி விகிதங்கள் உயர்வுக்கு ஆளாகும் போது தன்னியக்கமாகவே வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை ஏற்றி, பிடித்தத்தையும் செய்து விடுகிறார்கள். ஆனால் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், வாடிக்கையாளர்கள் அப்பயனை தங்களுக்கு அளிக்குமாறு விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்ற நடைமுறையை கடைப்பிடிக்கிறார்கள். இதை அவர்கள் செய்யாவிடில் மிகப் பெரும் இழப்பிற்கு ஆளாகிறார்கள்.

அவர்கள் இழக்கும் தொகை கற்பனைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. நுகர்வோர் விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ள நாட்டில் இந்த நடைமுறை சாமானிய மக்களிடம் இருந்து பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கு ஓப்பானதாகும்.

மேலும் இந்த நிறுவனங்கள், வட்டிக் குறைப்பிற்கு விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு அப் பயனை வழங்குவதற்கான அலுவலக நடைமுறைக்கு சில ஆயிரங்களை சேவைக் கட்டணமாக விதிக்கிறார்கள். அதன் மீது 18% ஜி.எஸ்.டி வரியும் கட்ட வேண்டியுள்ளது. விழிப்புணர்வோடு வட்டிக் குறைப்பு பயனை பெறுவதற்கு விருப்பம் தெரிவிப்பவர்களையும் தண்டிப்பதேயன்றி இது வேறென்ன!

வட்டி விகித மாற்றங்களுக்கு இரட்டை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவது இயற்கை நீதிக்கு முரணானது. அதுவும் “நெகிழ்வான வட்டி விகித” முறைமைக்கு கடன் வாங்குகிற முதற் கட்டத்திலேயே விருப்பம் தெரிவிக்கிற நிலையில் ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு நிபந்தனையை விதிப்பது வாடிக்கையாளர் நலனுக்கு முற்றிலும் எதிரானது.

எனவே வாடிக்கையாளர்கள் நலன் காக்கிற வகையில், எல்லா வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களும் இத்தகைய தர்க்க நெறிகளுக்கு மாறான நடைமுறையைத் தொடராமல் தடுக்குமாறும், ஏற்கெனவே வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் வட்டித் தொகைகளை பின் தேதியிட்டு திரும்ப வழங்குவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

சு.வெங்கடேசன்

நாடாளுமன்ற உறுப்பினர்,

மதுரை தொகுதி.

To

Ms Nirmala Sitaraman,
Honourable Minister of Finance,
Government of India
New Delhi

Respected MOF Ms. Nirmala Sitaraman,

Re: Injustice to the Customers of Housing loan companies due to illogical procedure

I wish to bring to your attention the huge losses suffered by the customers of housing loan companies and injustice meted out to them.

This is due to illogical procedure being adopted by the housing loan companies in charging new rates for existing customers consequent to the decision on the same by RBI.

All housing finance companies are charging higher rates of interest for existing loans automatically when rate hike is done consequent to RBIs decision, but customers are to submit option to convert to lower rate, if rate gets reduced, failing which results in loss of huge sum.

The losses being suffered by the customers are in unimaginable proportions. In a country where consumer awareness is very low, this practice is tantamount to loot of money from ordinary people by big companies.

More over these companies are charging thousands of rupees as service charges plus GST @ 18% for exercising option for reduced rate. This is nothing but penalising customers for exercising option consciously to avail the benefit.

It is against natural justice to adopt two different approaches for rate changes detrimental to the customers when they had already exercised option originally for the regime of flexible interest.

I request you to intervene immediately to safeguard the interests of and issue suitable instructions to restrain all housing loan companies from continuing illogical procedure and also to refund the interest collected in excess with retrospective effect.

With regards,

Yours faithfully,

(S.Venkatesan)
Member of Parliament,
Madurai constituency.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...