வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீதான சாதிய ரீதியிலான தாக்குதலுக்கு சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டணம்!

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் பூலாம்பாளையம் கிராமம், செல்லரபாளையத்தைச் சேர்ந்த வெளிச்சம் தொலைக்காட்சியின் நிருபராக உள்ள திரு.கண்ணன் (அருந்ததியர்), மே 24 அன்று, அவருடைய ஊரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் வருவதாய் இருந்த திருமணம் கொரோனா தொற்று பரவல் நிலையில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காததால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செல்லரபாளையத்திற்கு வந்த அமைச்சர், சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி, அவருடன் வந்தவர்களை தூண்டிவிட்டு தாக்கச் செய்ததாக நிருபர் கண்ணன் காணொளிப் பதிவை வெளியிட்டுள்ளார். இதையொட்டி கண்ணன் மீதே வழக்குப் பதிவு செய்து, பிணையில் விடுவித்துள்ளனர்.

நிருபர் கண்ணன் காவல்துறை தலைவர், மாநில மனித உரிமைகள் ஆணையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் புகார் அனுப்பியுள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவருக்கு நியாயம் கிடைக்கச் செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கண்ணன் மீதான தாக்குதலையும், காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

கே.கந்தசாமி
கரூர் மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...