வெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம்! – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு மக்கள் துயர்துடைக்கும் பணியில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள கேரள சகோதர, சகோதரிகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது நம்முடைய உடனடிக் கடமையாகும். உயிர் இழந்து, வீடுகள், உடமைகள் இழந்து தவிக்கும் கேரள மக்களுக்கு உதவிடும் வகையில், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், வர்க்க வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களால் இயன்ற நிதியை உடனடியாக கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

நிதி அனுப்ப வேண்டிய முகவரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
தமிழ்நாடு மாநிலக்குழு,
27, வைத்தியராமன் தெரு, தி. நகர்,
சென்னை – 600 017.
போன்: 044-24341205, 24326800 / 24326900
பேக்ஸ்: 044 – 24341294
Email: cpimtn2009@gmail.com,

SB A/C No: 418674546,
IFSC Code No: IDIB000T014,
Name: Communist Party of India (Marxist),
Tamilnadu State Committee,
Indian Bank, T.Nagar Branch, Chennai

ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் தோழர்கள், நண்பர்கள் தங்களது பெயர், மற்றும் முகவரி, அனுப்பிய தொகை, இ.டிரான்ஸ்பர் ரெபரன்ஸ் நம்பர், வங்கி செலான் ஆகிய விபரத்தை கட்சியின் மின்னஞ்சலுக்கோ (cpimtn2009@gmail.com), பேக்ஸ் (044-24341294) மற்றும் கடிதம் மூலமாகவோ தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம். காசோலை மற்றும் வரைவோலை அனுப்புவோர்கள் Communist Party of India (Marxist), Tamilnadu State Committe என்ற பெயருக்கு அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம். மணியார்டர் மூலம் அனுப்புவோர்கள் கட்சியின் மாநிலக்குழு முகவரிக்கு அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...