வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சிதம்பரம் எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்றார்

கடலூர் மாவட்ட நகர்ப்புறங்களில் கார்களில் அதிகாரிகள் புடை சூழ பவணி வரும் மந்திரிகள் மக்களின் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக சொல்கின்றனர். ஆனால் இந்த நொடி வரை நிலை அதுவல்ல. சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருளர் மக்கள் வாழும் பகுதிகளிலும், தலித் மக்கள் வாழும் பகுதிகளிலும் மற்றும் தண்ணீர் சூழ்ந்துள்ள அனைத்துப் பகுதிகளிலும் மக்கள்  உணவும் குடிநீரும் இல்லாமல் தவிக்கின்றனர். இன்னும் 70 சதவிகிதமான கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை.

சிதம்பரத்தை அடுத்து உள்ள பிச்சாவரம் ஏரி, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் பருவ மழைக்கு முன்பு முறையாக தூர்வாரப்படாததால் அடைத்துக் கொண்டுள்ளது. அதனால் நகர்ப்புறங்களிலும் விவசாய நிலங்களிலும் கிராமப்புற குடிசைப் பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

ஓடைகளை ஒழுங்காக்கும் பணியையும் சாலைகளின் தடுப்புகளை முறையாக்கும் பணியிலும் அரசு அதிகாரிகளை ஈடுபடுத்தி இன்று 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சென்றார். உடன் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, கற்பனைசெல்வம், ராஜா மற்றும் பரமாணந்தம் உள்ளிட்டோர் சென்றனர்.

Check Also

நிவர் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்! – தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வேண்டுகோள்!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி நாகை முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கரையை ...