மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ. மற்றும் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க. பீம்ராவ் ஆகியோர் – வெள்ள நிவாரண நிதிக்காக ஏற்கனவே அறிவித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 5,55,000/-க்கான காசோலையை இன்று (23.12.2015) தலைமைச் செயலகத்தில் நிதித்துறை இணைச் செயலாளரிடம் நேரில் அளித்தனர்.
23.12.2015
பெறுநர்:
உயர்திரு. தலைமைச் செயலாளர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம், சென்னை 600 009.
அன்புடையீர்! வணக்கம்.
சமீபத்திய கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்களும், தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவது என்று முடிவு செய்து அறிவித்திருந்தோம்.
அதனடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான
1. அ. சவுந்தரராசன் – பெரம்பூர், 2. கே. பாலபாரதி – திண்டுக்கல், 3. கே. பாலகிருஷ்ணன் – சிதம்பரம், 4. கே. தங்கவேல் – திருப்பூர் தெற்கு, 5. ஆ. லாசர் – பெரியகுளம், 6. பி. டில்லிபாபு – அரூர், 7. ஆர். அண்ணாதுரை – மதுரை தெற்கு, 8. க. பீம்ராவ் – மதுரவாயல், 9. ஆர். ராமமூர்த்தி – விக்கிரவாண்டி, 10. வி.பி. நாகை மாலி – கீழ்வேளூர் – ஆகிய 10 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ.5,50,000/-க்கான (ரூபாய் ஐந்து லட்சத்து ஐம்பதினாயிரம் மட்டும்) தொகையை மாண்புமிகு. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
தங்களன்புள்ள,
/ஒப்பம்
(அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ.,)
தலைவர் – சிபிஐ (எம்) சட்டமன்றக்குழு,
பெரம்பூர் தொகுதி
இணைப்பு:
காசோலை எண்: 065500 தேதி: 22-12-2015
தொகை: ரூ. 5,50,000/-
இந்தியன் வங்கி, தி.நகர் கிளை, சென்னை – 17.