வெள்ள நிவாரண பணிகளில் அரசு மெத்தனம் கே. பாலகிருஷ்ணன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்து பெய்து வருகிறது.

கடந்த 9 ந்தேதி கொட்டித்தீர்த்த புயல் மழைக்கு கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏரி குளங்கள் குட்டைகள் உடைப்பு எடுத்து காட்டாறு வெள்ளம் போல் சீறிப்பாய்ந்து வந்ததால் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் நிரம்பி முழு கொள்ளவு எட்டியதால் அதிலிருந்து திறந்து விடப்பட்ட 7 ஆயிராம் கன அடி வெள்ள நீர் இரண்டு தாலுக்காவில் உள்ள விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

தீபாவளி பண்டிகை என்பதால் மேலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானர்கள். மேலும் மழைநீரால் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல்,வாழை,கரும்பு உள்ளிட்ட பணபயிர்கள் சேதம் அடைந்தன. கால்நடைகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட பிராணிகள் 4 ஆயிரத்துக்கும் மேல் இறந்துள்ளது.

கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் துன்டிக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் இருளில் முழ்கியுள்ளது.

மேற்கண்ட பாதிப்புஅடைந்த இடங்களை எந்த அதிகாரிகளும் இதுவரை பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை. பொதுமக்கள் தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் கடும் குளிரில் இருந்து வருகின்றனர். மாவட்டத்தில் 26 பேர் மழையால் இறந்துள்ளனர். மேலும் பொதுப்பணிதுறையினர் சரியான வடிகால் வசதியினை செய்யவில்லை.

கீழே விழுந்த மின் கம்பங்களை மின் துறையினர் ஆட்கள் பற்றாகுறையால் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றது. இதனால் வெளிமாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் தற்போது தான் வந்துள்ளனர், இன்னும் ஒரு வார காலமாகும் நிலமை சிர் அடைவதற்கு. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வைட அதிகாரிகள் வராததால் சிதம்பரம் சட்ட மன்ற உறப்பினர் பாலகிருஷ்ணன் நேற்று முன் தினம் மழை விட்டது முதல் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு அதிகாரிகளை உடனுக்குடன் தொடர்பு கொண்டு மக்கள் பிரச்சனைகளை தெரியபடுத்தியுள்ளார். மேலும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் தற்போது பெய்துள்ள மழை ஒன்றும் அதிகமானது அல்ல எங்கும் முறையான வடிகால் வசதி இல்லாததால் அனைத்து கால்வாய்கலும் தூர்வாரபடாமலும்,ஆக்கிரமிப்பு செய்ததாலும் ஆகாய தாமரை படர்ந்துள்ளதால் இதனை அவ்வபோது சரிசெய்யாமல் விட்டதால் தண்ணீர் வடிய ஒரு வார காலம் ஆகும்.

புயல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லை. மேலும் சென்னைக்கு வீராணம் தண்ணீர் தேக்கியதாலும்,அதன் மேல் இந்த வெள்ளநீர் வந்ததால் 36 மதகுகள் வழியாகவும் வெள்ளியங்கால் ஓடை வழியாகவும் திடீரென்று திறந்து விட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் விவசாயிகள் பாதித்ததோடு மட்டும் அல்லாமல் தீபாவளிக்கு கொள்முதல் செய்த வியாபாரிகளும் கடுமையான நட்டம் அடைந்துள்ளனர்.எனவே அரசு கடலூர் மாவட்டத்துக்கு ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து உயிர் இழந்த குடும்பங்களுக்கு ரூ 10லட்சம், குடிசை வீட்டுக்கு 15ஆயிரம். கரும்பு ஏக்கருக்கு ஒரு லட்சம் வாழைக்கு 1.5 லட்சம்,மாடு 25 ஆயிரம், ஆடுகளுக்கு 5ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

உடனடியாக 20 கிலோ அரிசி, மண்ணெண்னை வழங்க வேண்டும் மொத்ததில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது அதிகாரிகள் ராஜ்யம் நடக்கிறது. மக்கள் பிரதிநிதிகளை மதிப்பது இல்லை அரசு கோமா நிலையில் உள்ளது. எனவே அரசு தேர்தலுக்கு நிவாரணம் வழங்குவதை விட்டு உன்மையான நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையேல் மக்கள் நல கூட்டணி சார்பில் ஒத்த கருத்துடைய அமைப்புகளை திரட்டி மிகபெரிய போராட்டம் நடத்தபடும் என்று கூறினார்.

பேட்டியின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லப்பன், சிபிஎம் நகர செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு மற்றும் கற்பனை செல்வம், குமராட்சி ஒன்றிய செயலாளர் ராம்மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

This slideshow requires JavaScript.

முன்னதாக வெள்ளம் பாதித்த பகுதிகளான குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லம்படுகை,அண்ணாமலைநகர் உள்ளிட்ட இடங்களை பார்த்தனர். பின்னர் அண்ணாமலைநகர் மண்ரோடு அன்புதெருவில் வசிக்கும் தங்கராசு(75) என்பவர் அவரது விட்டின் மீது மரம் விழுந்து 10ந் தேதி இரவு வீட்டின் உள்ளே காலமானார் இதனை அறிந்த எம்எல்ஏ சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...