ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மரணம் குறித்து உயர்மட்ட நீதி விசாரணை நடத்துக: சிபிஐ(எம்) வலியுறுத்தல்

ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் இன்று தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வருகிறது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டபோதே தற்கொலைக்கு முயற்சித்ததாக செய்தி வந்தது. ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறபோது எப்படி தற்கொலை செய்துகொள்ள முடியும்? சிறை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது?  சிறை நிர்வாகம் ராம்குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

எனவே, ராம்குமார் மரணம் தற்கொலையா இல்லையா என்பதை விசாரிக்க,  தற்போது பொறுப்பில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு உயர்மட்ட நீதி விசாரணை நடத்திட வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை  வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...