15 ஆண்டு கால தொழிலாளர் போராட்டம் வெற்றி – சிபிஐ(எம்) வாழ்த்து!

2.4.2016

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தெர்மா மீட்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வந்த போது கொடைக்கானல் பகுதியின் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு காரணமாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் அதில் பணியாற்றிய 591 தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படாமல் பிரச்சனை நீடித்து வந்தது. பன்னாட்டு நிறுவனமான இந்துஸ்தான் யூனி லீவர்  தொழிலாளர்களின் நஷ்ட ஈடு குறித்த கோரிக்கைகளை ஏற்கவில்லை.

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு தற்போது நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்குமிடையே பிரச்சனைகள் இணக்கமான முறையில் தீர்க்கப்பட்டு நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டுள்ளன. 15 ஆண்டு காலம் இப்பிரச்சனைக்காக போராடிய தொழிலாளர் நல சங்கத்திற்கும், பல்வேறு சகோதர அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.

இந்நிலையில் மேலும் தீர்க்கப்படாமல் நீடித்து வருகிற பாதரச கழிவு அகற்றும் பிரச்சனைக்கும் தீர்வு காண்பதற்கு இந்துஸ்தான் யூனி லீவர் நிறுவனமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் சுற்றுச் சூழல், காடுகள், பருவ நிலை மாற்றம் அமைச்சகம் ஏற்கனவே வழங்கியுள்ள பரிந்துரைக்கு இணங்க 6.6 மில்லி கிராம் / கிலோ என்கிற தரத்தில் கழிவு அகற்றும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...