4-3-2016 மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் திரள் ஆர்ப்பாட்டம்!!!

மக்கள் நலக் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் நாகர்கோவில் நகரச் செயலாளர்கள் ஆலோசனை; கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.முருகேசன் தலைமையில் வெட்டூர்ணிமடம் சிஐடியு அலுவலகத்தில் டைபெற்றது.கூட்டத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.வெற்றிவேல், சிபிஐ மாவட்டச்செயலாளர் எஸ்.இசக்கிமுத்து,விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் பு.திருமாவேந்தன்,மேற்கு மாவட்டச் செயலாளர் மத்தூர் ஜெயன்,சிபிஐ வி.கோபி,மதிமுக கிறிஸ்ஜெரால்டு, சிபிஐ(எம்) எஸ்.அந்தோணி, வி.சி.க அம்பேத்கார் வளவன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:

மாவட்டத்தில் நீண்டகாலமாக சாலைகள் ரணக்குழிகளாக உள்ளன. பல்வேறுகட்சிகள் பல்வேறு அமைப்புகள் கிராம மக்கள்; பல போராட்டங்களைநடத்தியுள்ளனர். இதன் விளைவாக நாகர்கோவில் நகராட்சியில் சில சாலைகளும் சில கிராம சாலைகளும் தேர்தலையொட்டி அவசர கோலத்தில் சரிசெய்யும் பணிகள் நடைபெறுகிறது. ஆனால் பல முக்கியச் சாலைகள் சரி செய்யப்படாமல் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலையில உள்ளன. மேலும் 14-05-2015 அன்று மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் சரி செய்ய மத்திய சாலை நிதியிலிருந்து சுமார் 212 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்தது. இந்த நிதிக்கான பணிகள் ஏன் நடைபெறவில்லை? ஒதுக்கப்பட்ட பணம் என்ன ஆனது?என்பது மக்கள் கேட்கும் கேள்வியாகவுள்ளது.

மேலும் சசிபெருமாள் மரணத்தையொட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் மாவட்ட ஆட்சியரும் முதல்கட்டமாக மக்கள் ஆட்சேபணை தெரிவிக்கும் டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்துவோம் என வாக்குறுதி கொடுத்தனர்.ஆனால் அதன் பிறகும் பலகடைகளை மாற்ற மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளியாடி நுள்ளிவிளை கோளிப்போர்விளை போன்ற பகுதிகளில் பல கடைகள் முன் போராட்டம் நடைபெற காவல்துறை அனுமதி
வழங்கவில்லை. விதிமுறைகளுக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளைஉடனே அப்புறப்படுத்த வேண்டும் எனவும்,

மாவட்டம் முழுவதும் வெளி மாவட்டங்களில் ஓடி ஆக்கர் கடைக்கு அனுப்ப வேண்டிய பேருந்துகளை திட்டமிட்டு குமரி மாவட்டத்துக்கு அனுப்பியுள்ளனர். பலதடங்களில் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்கவும் பல தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை அல்லது டிரிப்பை குறைத்துள்ளதை கண்டித்தும் மாவட்ட பொருளாதாரத்தை சிதைத்துள்ள ரப்பர் விலை குறைப்பிலிருந்து ரப்பர் விவசாயத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும்,

நீர்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க வண்டல் மண்ணை மாற்றியும் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசைவலியுறுத்தி; 04-03-2016 அன்று காலையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...